Related Posts with Thumbnails

புதன், 30 டிசம்பர், 2009

நமது நட்புப் பற்றி




ஒரு அறுகம்
புல்லிலும் மென்மையான
நமது நட்பு பற்றி
இன்னும் எனது
கண்ணீர் துளிகள் பேசுகின்றது.

எல்லோருக்கும்
உன்னைப் போலேவே
அன்பும் மென்மையும்
நிறைந்த நண்பன் கிடைப்பதில்லை
அந்த வகையில்
நான் அதிஸ்டக்காரன்.

எந்தத் துர்தேவதையின்
சாபம் நம்மைப் பிரித்தது

ஒவ்வொரு விடுமுறையும்
நம் கிராமத்தை
தரிசனம் செய்யும்
தருணங்களில் ...
உன்னை தேடி அவாவும்.
என் கண்கள்
வெறுமை கலந்த
ஏமாற்றத்துடன் திரும்புகிறது..

வாழ்க்கைப் பாரத்தை
இறக்கிவைக்க
நீ ஒரு திசையில்
நானொரு திசையில்

எல்லாம் முன்னேற்றம்
அடைந்து விட்ட போதும்
இன்னும் நமது முகவரிகள் மட்டும்
மூடியே கிடக்கின்றது.
நாம் அறியாமல்.

நாச்சியாதீவு பர்வீன்.
armfarveen@gmail.com.

Read more...

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இரவுத் திருடன்.


பின்னேரத்தின் வெளிச்சம்
அருகிப் போய்
இருள் கவ்வத் தொடங்கியது
பூமியை.......

குருவிகளினதும் காக்கைகளினதும்
இரைச்சல் ஒலிஅடங்கிப் போய்
வெகு நேரம் ஆகிப் போனது

மரங்களின் ஆட்டம் இல்லை
மனிதர்களின்
நடமாட்டம் இல்லை
எல்லா உயிரினங்களும்
உறங்கிப் போய்
வெகு நேரமாகிப் போனது,

இரவின் காதலன்
சந்திரன் மட்டும்
நட்சத்திர நண்பர்களோடு
வானத்து தெருக்களில்
பவனிவந்தான்...

ஊர் உறங்கிப் போனதை
உறுதிப் படுத்திக் கொண்ட
அந்தத் திருடன் களத்தில்
குதித்து விட்டான்...

இன்று யார் வீடோ..
ஆனால் இவனது
எல்லா திருட்டுகளையும்..
வழமைபோலவே
ரசித்துக் கொண்டிருந்தனர்..
மெல்லிய இருளும்..
மேகக் கூட்டங்களும்
சந்திரனும்..
அவன் சகாக்களும்..

நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரி விட்ட பின்வரிசை துடுப்பாட்டம்.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றாகும், இலங்கை அணியின் அசுரமான துடுப்பாட்டம் ஒன்றைமட்டுமே நம்பி
நமது அணி இந்த இந்தியத் தொடரில் பங்கு பற்றுவதாகவே கருத முடிகிறது, களத் தடுப்பிலும், பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் பிரகாசித்ததாக கூறமுடியாது, எப்படியோ துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஒருமைதானத்தில் இலங்கை அணியின் பலமில்லாத பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலவீனத்தால் மூன்றாவது ஒருநாள் போட்டி இலகுவாக இந்தியா வசமாகியது.

நல்ல போர்மில் உள்ள தில்சானின் அவசரமான துடுப்பாட்டம், அவரது கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்த தவறியமை மொத்த ஓட்ட எண்ணிக்கையின் வீழ்சிக்கு பிரதான காரணமாகும், உபுல் தரங்க-தில்சான் இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள், கூட்டாக இயங்காத தன்மை, நானா? நீயா? என்ற மனப்பான்மை தில்சானை அவசரப் படுத்தியிருக்கலாம்,

உபுல் தரங்க-சங்ககார ஜோடி கூட அற்புதமாகத்தான் ஆடியது சங்ககார அநியாயத்திற்கு சேவக்கின் பந்து வீச்சிற்கு ஸ்டாம் செய்யப்பட்டு வெளியேறியது பரிதாபகரமானது, சங்ககாராவின் ஆட்டமிழப்பு மட்டுக்கும் அணியின் ஓட்ட எண்ணிக்கை சராசரி ஆறு வீதத்தை தாண்டியே சென்றது, அவரின் ஆட்டம் இழப்பின் பின் மஹேல மீண்டும் சொதப்பிவிட்டு சென்றார், அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது
மஹேல கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம், மஹேலவின் அற்புதமான துடுப்பாட்டம் எங்கே போனது பொறுமையும், நிதானமும் கலந்த அவரது துடுப்பாட்டத்தை இப்போதெல்லாம் அவர் வெளிப்படுத்த தவறுவது அணியில் அவரது இடத்தை எதிர் காலத்தில் கேள்விக் குறியாக்கலாம்.

சதம் அடிப்பார் என நினைத்த தரங்க ஏமாற்றினார், எல்லாம் அவசரம் தான்,

கண்டம்பி, கபுகெதர இருவரும் துடுபாட்டத்திட்கு சாதகமான மைதானத்தில் ஆட தகுதியற்றவர்கள், பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்திலேயே இவர்களின் பயிற்சிகள் இடம்பெற்றிருப்பதால் அவ்வாறன மைதானங்களில் மட்டுமே இவர்களால் ஆடமுடியும் என்பதை இவர்களது
அண்மைய துடுப்பாட்ட நிலவரம் தெளிவாக்குகின்றது, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதனமென்றால் வேகமாக துடுப்பெடுத்து ஆட வேண்டிய அவசியம் இல்லை பந்தை தடுத்து விக்கட்டை பறி கொடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலையில் தான் ஆட வேண்டும், இந்தவகையில் இவர்கள் இருவரையும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினால் நல்லது,
அஞ்சலே மத்திவின் வெற்றிடம் தெளிவாக விளங்குகிறது, இந்தப் போட்டியிலாவது சனத்தை பயன் படுத்தியிருக்கலாம், இலங்கை அணி சகல துறை ஆட்டக்காரர்களின் அவசியத்தை ஏன் இன்னும் உணராமல் இருக்கின்றது என்பது புரியவில்லை, சுராஜ் ரண்டிவ் நல்ல தெரிவு, வாஸ் போன்ற சகல துறை ஆட்டக் காரர்களின் அவசியம் அணியின் கட்டாயத்தேவை, பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலத்தில்தான் அணியின் சராசரி வெற்றி தங்கியுள்ளது.
ஜடேஜா, ஹர்பஜன், நன்றாக பந்து வீசினார்கள்,ஜடேஜா அற்புதமாக செயற்பட்டார். இலங்கை அணியை மடக்குவதில் இவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கது.
இந்திய அணி வெகு கூலாக வெற்றி இலக்கை தொட்டது, சேவாக், டெண்டுல்கர் ஆகியோரின் அபாரமான ஆட்டம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தது, டெண்டுல்கார் மீண்டும் அசத்தினார், சிங்கம் சிங்கம்தான். அமைதியாக, வெகு கூலான டென்டுல்காரின் ஆட்டம் சூப்பெர்ப், என்ன ஒரு குறை வெறும் நாலு ஓட்டத்தில் சென்ச்சரியை தவறவிட்டது தான்.

இலங்கை அணி அடித்த ஆட்டத்திலாவது தன்னை சீர் செய்து கொள்ளுமா?........................பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009


For more widgets please visit solidaire maintenant

Read more...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சட்டியிலேயே கிடந்து கொதிப்போமா? அல்லது அடுப்பில் விழுந்து எரிவோமா?



இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியே எதிவரும் ஜனாதிபதி தேர்தல் பற்றித்தான், இலங்கையின் பட்டி தொட்டி என்று எல்லா முனைகளிலும், எல்லா தரப்பினரும் குசுகுசுக்கும், வாதிக்கும் விடயம் எதிவரும் ஜனாதிபதி தேர்தல், இலங்கையையும் தாண்டி உலக அரசியல் அரங்கில் இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அவதானிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது எனலாம், எப்படியோ ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டு, நோமிநேசன் கூட கட்டியாகிவிட்டது, சுமார் 22 பேர்கள் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர், இதில் பிரதானமாக இருவர் மட்டுமே களத்தில் வாக்கு வேட்டைக்காக குதித்துள்ளார்கள் என்பது
எல்லோரும் அறிந்த விடயமாகும், ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா!
இருவரும் ஒரே அணியில் கட்டிப் புரண்டவர்கள்தான் இருந்தும் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது அந்த வகையில் நாட்டு மக்களுக்காக சரத் பொன்சேகா! தன்னை அரசியலில் ஈடு படுத்தியுள்ளாராம் (நல்லாவே காதில் பூ சுத்துகிறார்).

இந்த தேர்தலை மிகவும் ஆழமாக அவதானிக்கவும், ஆராயவும் வேண்டியுள்ளது, அதற்காக வலுவான பல காரணங்கள் உள்ளன,மட்டுமன்றி சிறுபான்மையினர் பற்றிய இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் அவதான குவிப்பு பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்.
02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்.
03 ) சர்வதேசத்தின் நிலைப்பாடு
04 ) சிறுபான்மை இனக் குழுமத்தின் நிலைப்பாடு.

மேற்சொன்ன தலைப்புகளில் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால் இலகுவாக இருக்கம் எனக் கருதுகிறேன்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்

யுத்தம் தொடர்பான வெற்றியை மூலதனமாக வைத்தே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன் எதுத்துச்செல்கின்றார், இது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றிய ஒரு மாய விம்பத்தை
தோற்றுவித்துள்ளது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 74 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாவார்கள்.அதிலும் 65 வீதமானவர்கள் கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள், இந்த 65 வீதமான கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் யுத்த வெற்றியை நாட்டுக்கு கிடைத்த சுத்தந்திரமாகவே கருதுகின்றனர், மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மைக்காலமாக பொதுக் கூட்டங்களில் தமிழில் உரையாற்றுவதும், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எல்லா தரப்பினரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்றும் சொல்லி வருவது சிறுபான்மையினர் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, இருந்தும் தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் வெள்ளை வேனைக் கொண்டு கடத்தப் படுவதும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், சடுதியான பொருளாதார வீழ்ச்சியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பின்னடைவுக்கான வலுவான காரணங்களாகும்.

மீள் குடியேற்றம் துரிதமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த மக்களின் மெய்யான உணர்வுகளை இந்த தேர்தல் பிரதிபலிக்கும், இதையும் தாண்டி வடமேல் மாகாண பாரளமன்ற உறுப்பினரும் ஜோன்சன் பெர்னாண்டோ, மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் எஸ்.பி.திசாநாயக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத்சாலி, இப்படி எதிர் கட்சியில் பிரபல்யமான
பல தலைகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும், அவர் சார் அரச ஊடகங்களினதும் சரத் பொன்சேகா மீதான அதீதமான தூற்றுதல்கள், கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், சரத் போன்செகாவுக்கான இலவச விளம்பரங்களாகும்,

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி குடும்ப ஆட்சிஎன்றும் அதனை இல்லாது ஒழிக்கவே தாம் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதாகவும் கூறும் ஜெனரலின் பேச்சு உண்மையாக இருந்தும் எடுபடுவதாய் தெரியவில்லை, அத்தோடு அர்ஜுன ரணதுங்கவின் பல்டி இன்னுமொரு பேரிடியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விழுந்துள்ளது, பலவிடயங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையை தடவி குட்டும் அரசியல் சாணக்கியத்தை கொண்டுள்ளதும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப் பட்டதும் பொதுமக்களால் குறிப்பாக சிறுபான்மையினாரால் அவதானிக்கப்பட்ட விடயமுமாகும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னதான் இந்த நாடு எல்லா இனத்தினருக்கும் சொந்தம் என்று சொன்னாலும் இன்னும் "மே புதுன்கே தேசயே" இது பவுத்தர்களின் தேசம் என்கின்ற இனத்துவேச கோசம் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.

அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசன் சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன் ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளை
திரட்டி ஜனாதிபதிக்கு தமது பலத்தை காட்ட முழு முனைப்புடன் செயற்படுவர், அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் அமீரலி, பேரியல் அஸ்ரப், பாயிஸ் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ் போன்றோர் முஸ்லிம்களின் வாக்குகளை திரட்ட முயற்சி செய்வார்கள். இதே நிலை வடக்கிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் முஸ்லிம்களின் வாக்குகளும், டக்லஸ் தேவானந்தா தலைமையில் தமிழர்களின் வாக்குகளும் திரட்ட ஆளும் கூட்டணி முயற்சி செய்யும்,
எப்படியோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கணிசமான அளவு வாக்குகள் எடுப்பார்,...............

மலையகத்தில் இருக்கவே இருக்கிறார் ஆறுமுகம் தொண்டமான் மக்களாவது மண்ணாங்கட்டியாவது தனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அதுவே நான் செய்த புண்ணியம் இவரை நம்பியும் இலட்ச்சக் கணக்கான அப்பாவி வாக்காளர்கள் எனவே இந்த அப்பாவி மக்களின் வாக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கே.எப்படியோ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயந்து டென்சனாகி காணப்பட்டாலும் ஓட்டப் பந்தயத்தில் அவரோடு ஓட வந்திருப்பது நொண்டிக் குதிரைகளாகும் எனவே நாம் விரும்பியோ
விரும்பாமலோ மீண்டும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே அதிகம் உள்ளது அது நியாயமான தேர்தலாக இருந்தாலும் சரி.......அல்லது................

02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்..

முன்னர் இருந்த எந்த இராணுவ தளபதிக்குமில்லாத அளவுக்கான புகழ் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் யுத்த வெற்றியாகும், வெறும் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு திடீரென எப்படி அரசியல் ஆசை முளைத்தது அங்கேதான் நிற்கிறார் ரணில் விக்ரமசிங்க எனும் அரசியல் சாணக்கியன், ரணில் விக்ரமசிங்க எத்துனை முறை தோற்றாலும் அரசியல் ரீதியாக அவருக்கு இருக்கின்ற மதிநுட்பமும், ஆளுமையும் இன்னும் கிஞ்ச்சித்தும் குறையவில்லை எனலாம்,
இதற்கு நல்லபல உதாரணங்களை கூறமுடியும், 2001 களில் UNP ஆட்சி பீடமேரியது விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று
ஒரு புறம் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த அதே காலப் பகுதியில் அலிசாகிர் மௌலானவை பாவித்து விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளரும், வே.பிரபாகரனின் வலது கையுமான கருணா அம்மானை பிரித்து அசைக்க முடியாத ஒரு போராட்ட அமைப்பின் ஆணிவேரை பிடுங்கி பிளவு உண்டு பண்ணி அந்த அமைப்பே அடியோடு அழிவதற்கு பாதை சமைத்தவர். இதே நிலை தான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் நடந்தது.

உண்மையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வமும் ஆசையும் ஆரம்பத்தில் இருக்கவில்லை
இதனால் தான் கனடாவில் வைத்து இலங்கை பவுத்தர்களுக்கான நாடு இதில் சிறுபான்மையினர் அதிகபட்ச உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றதும், மதுவும், போதையும் மக்கள் பாவிக்க வேண்டும் அது மூளையின் சுறுப்பான இயக்கத்திற்கும், உடம்பின் உற்சாகததிக்கும உதவும் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை இவர் வெளியிட்டார், இது இப்போதுகளில் பிரபல்யமாகியுள்ளன, இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பின்னடைவாக கருத முடியும் மட்டுமன்றி அத்தோடு அரசியல் ஆசை இவருக்கு ஏலவே இருந்த்திருந்தால் மேற்சொன்ன மடத்தனமான கருத்துக்களை முன் வைத்திருக்க மாட்டார், எனவே பொன்சேகாவை அரசிலிருந்து பிரித்து ஜனாதிபதிக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளராக்கிய பெருமை சாட்சாத் ரணில் விக்கிரமசிங்கவுக்கே சேரும்,

இனி பல கட்சி கூட்டணி, JVP ஏலவே மக்கள் மத்தியில் அதிருப்தியுடைய கட்சியாக பெயர் பெற்று, துவேசக் கருத்துகளை மூலதனமாக்கி அரசியல் பொழைப்பு நடத்தவந்து கேவலப் பட்டு நிற்கும் கட்சி, நிச்சியமாய் இவர்களினால் ஜெனரலின் வாக்கு வங்கி குறையுமே தவிர கூடாது, ரணிலையும் UNP கட்சியினையும் பாரதூரமாக விமர்சித்துவிட்டு தமக்கு சலுகை கிடைக்கவில்லை என்றதும் முரண்பட்டு மூட்டையை கட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள், அதிலும் தமது பாராளமன்ற உறுப்பினர்கள் பலரை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.

UNP இன் திட்டம் தான் இது என்றாலும் ரணில் இந்தத் தேர்தலில் ஆரோக்கியமான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளர், தான் வெற்றி பெறப் போவதில்லை என்ற எதார்த்தம் ரணிலுக்கு புரிந்திருக்கிறது, எனவேதான் மாற்றுவழி தேடினார், ஜெனரல் மாட்டினார். UNP இக்கான
வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் காண முடியாது அது ரணில் விரல் நீட்டும் திசையில் விழும், அந்த வகையில் ஜெனரல் UNP இனருடைய வாக்குகளை தனதாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை நினைத்துக் கொண்டு மேடைகளில் முழங்குகின்றனர், கண்ட இடங்களிலும் கும்பிடு போட்டு, சமூகம்,சமூகம் என்று கூறிக்கொண்டு UNP இன் பணக் கட்டுகளுக்கு அடிமையாகி இருக்கும் ரவுப் ஹகீம் போன்றவர்களால் வெற்றுக் கோசம் போட மட்டுமே முடியும், மாறாக
முஸ்லிகளின் 80 வீதமான வாக்குகளை கனவிலும் பெற்றுக்கொள்ள முடியாதாகும், இந்த அரசின் மீதான கோபத்தை முஸ்லிம்கள் ஒருவேளை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பயன்படுத்தலாமே ஒழிய அது ரவுப் ஹகீமுக்காக அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் கண்க்ராசுக்காக என்பது முட்டாள்தனமே, உண்மையில் இனவாதத்தை தூண்டுபவர்களில் ரவுப் ஹக்கீமும் ஒருவர் என்றே கருத
முடியும்.

அடுத்து மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேஷன், தமிழ் என்றும் தமிழர் என்றும் குரல் கொடுக்கும் இவர் டமிலில் பேசுவது எந்த்தத் தமிழினத்தை காப்பாற்ற என்று புரியவில்லை, அடிக்கடி கொள்கை மாறும் இவரை நம்பியும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் எனும் போது நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு மீது சந்தேகம் எழுகின்றது,
ஆக இந்த அரை வேக்காடுகள் எல்லாம் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆற்றில் இறக்கியுள்ளர்கள், சரத் பொன்சேகாவும் இவர்களை நம்பி ........(மண்குதிரைகள் என்று தெரியாமல்) இறங்கியுள்ளார்.

இதற்கிடையில் கோசம் வேறு! நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆப்பு வைப்போம், மன்னராட்சியை கவிழ்ப்போம், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், இவைகளெல்லாம் மக்களை உசுப்பேத்த போடும் மாய வார்த்தைகள், இதையேதான் JR தொடக்கம் இந்த மஹிந்த மட்டுக்கும் சொன்னார்கள் என்னத்தை கிழித்தார்கள், ஏதோ சரத் பொன்சேகா கொஞ்சம் வாக்கு எடுப்பார் ஆனால் நிச்சியமாய் வெற்றி பெறமாட்டார்.
இருந்தும் முன்னாள் ஜனாபதி சந்திரிகா, மங்கள சமரவீர ஆகியோரின் ஒத்துழைப்பு ஒருவேளை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவரலாம்........
( தொடரும்....)

Read more...

வியாழன், 17 டிசம்பர், 2009

அதிரடியும் அசத்தலும்,(50 /50 )



இலங்கை, இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கலக்கலாக முடிந்து போயுள்ளது, இந்திய அணியின் அதிரடியான துடுப் பாட்டம் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது, முரளியின் இடைவெளி தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட ஆட்டமாக இதனைக் கொள்ள முடியும், ஒருவேளை முரளி இருந்திருந்தால் இந்திய அணியின் ஓட்ட வேகம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம், சேவாக்கின் அதிரடி பந்து தடுப்பளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது, டெண்டுல்கர்,தோனி, ஆகியோரின் துடுப்பாட்டம், கடைசியில் ஜடேஜாவின் இரண்டு சிக்சர்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை
414 ஆக உயர்த்தியது,

இந்திய அணிக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோரணையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடங்கியது,
தில்சானின் அபாரமான அதிரடி துடுப்பாட்டம், மைதானத்தை அழகு படுத்தியது, மட்டுமல்ல இந்திய அணியினரின் வயிற்றில் புளியை கரைத்தது, உபுல் தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம், இலங்கை அணியினை வெற்றியின் பக்கம் இட்டுச்சென்றது, எதிபாராத சந்தர்ப்பத்தில் உபுல் தரங்க ஆட்டமிழக்க அணித்தலைவர் சங்க கார வந்த வேகத்திலே விளாசத் தொடங்கினார், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் தலைவலிதொடங்கியது எல்லா முனைகளிலும் சங்ககார இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்,
அநேகமாய் இலங்கையின் வெற்றி நிச்சயிக்க பட்டு விட்டதாகவே விமர்சகர்கள், பார்வையாளகள் கருதினார்கள்,

அந்தோ பரிதாபம் சங்கவின் விக்கட் வீழ்ந்த போது, ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்( நானும் தான்), தொடர்ந்து ஜெயசூரிய, ஜெயவர்தன, இருவருமே சொதப்பி வெறுப் பெற்றினார்கள், வந்த வேகத்தில் திரும்பிய இவர்கள் இருவரும்தான் இலங்கையின் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் இருவரில் ஒருவர் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்,
தொடர்ந்து தில்ஷன் இன் ஆட்டமிழப்பு இலங்கை அணியின் வெற்றிக்கனவை ஆட்டம் கொள்ளச்செய்தது,
கடைசியில் கண்டம்பி,அஞ்சல மேத்திவ் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்கள், கடைசியில் 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இலக்கு இலங்கை அணிக்கு இருந்தது, இது ஒன்றும் எட்ட முடியாத பெரிய இலக்கு இல்லை அத்தோடு
அன்றைய போட்டியைப் பொறுத்த மட்டில் அது ஒரு பெரிய இலக்குமல்ல, இந்த நிலையில் கூட இலங்கை அணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது, அத்தோடு கண்டம்பி, மதிவ் ஆகிய இருவரும் குறைந்த பந்துகளில் கூடிய ஓட்ட எண்ணிக்கை எடுக்க கூடியவர்கள், ஆனால், இருவருமே சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமத்தை மேற்கொண்டனர், இதனால் இலங்கை அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றிக்கனியை சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் நேர்த்தியான, துல்லியமான இறுதி ஓவர்கள் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது, எல்லா அதிரடி துடுப்பாட்டக் காரர்களையும் தாண்டி இறுதி பந்து ஓவர்களை வீசிய அந்த இருவரின் அபாரமான ஆட்டம் பாராட்டத்தக்கது, வெறும் 3 ஓட்டங்களில் வெற்றி இலக்கை பறி கொடுத்த இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய ஒரு சிக்சர் அடித்து விட்டு ஆட்டம் இழந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிக்கலாம்...........
நாளைய(18 / 12 / 2009 ) போட்டி இதை விடவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்வு கூற முடியாது இரண்டு அணியும் சமபலத்தில் இருந்தாலும், இந்திய அணிக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்பு இருக்கிறது, எப்படியோ நாளைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இலகுவான வெற்றியாகவே அமையும் என்பது என் கருத்து.................?

Read more...

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மலிவு விலையில் நட்பு?



மலிவு விலையில் நட்பு?

நட்பு என்பது அலாதியான அனுபவமாகும், ஒரு "நல்ல நண்பன் கிடைப்பது ஆயிரம் பொற்காசுகள் கிடைப்பதை விடவும் மேலானது" என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி
"ஒருவனை அறிந்து கொள்ள அவனது நண்பனுடன் பழகிப் பார்" என்கிறது ஒரு முது மொழி
"நல்ல நண்பர்கர்களை தேடிக்கொள் உன் வாழ்க்கை சந்தோசமாக அமையும்" என்கிறது ஒரு அராபிய பழ மொழி.
எனவே இந்த உலகத்தில் தாய், தந்தை, உறவுகள் இவைகளின் அன்பானது இயற்கையிலேயே நமக்கு
கிடைக்கும் ஒன்றாகும் அதையும் தாண்டி பிறப்பிலே நமக்கு கிடைப்பதாகும், ஆனால் நட்பின் மூலம் கிடக்கும் அன்பும், நேசமும், புரிந்துணர்வும் மிகவும் வித்தியாசமானதாகும், அது புரிந்துணர்வின் அடிப்படையில் இடையில் நம்மோடு சேர்ந்து கொள்வதாகும் இருந்தும் .எள்ளுகளோடு புல்லுகளும் முளைப்பதுண்டு அப்படித்தான் சிலர் நட்பை கொச்சைப் படுத்தி விடுகின்றனர், சுயநலத்திற்காக நட்புக்கொள்ளுகின்றனர்., சந்தோசங்களின் போது கை குலுக்கி குதூகலிக்கும் இவர்கள் சிறு துன்பம் வரும் போது மெதுவாக நழுவி விடுவார்கள், இன்னும் சிலர் உள்ளார்கள் தமது தேவைக்காக மட்டும் வந்து நம்மோடு நட்புக் கொள்வார்கள் தேவை முடிந்தவுடன் கம்பி நீட்டி விடுவார்கள், இப்படி நட்பின் பேரில் நாடகமாடும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கின்றாகள்.

இதையும் தாண்டி நல்ல நட்பு. சந்தோசமானது, பாலகபருவ நட்பு, பள்ளிப் பருவ நட்பு, விடலைப் பருவ நட்பு, வாலிபப் பருவ நட்பு........... இப்படி நமது வாழ்நாளில் நாம் கடக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒருவகையில் நட்பும் நம்மை உரசிக்கொண்டும்,தாண்டியும் செல்கின்றது
நமது அன்றடங்களில் நாம் நிறையப் பேரை சந்திக்கின்றோம், சிலரை முன்பின் அறிந்திராமலே அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும் அவ்வாறே சிலர் மீது ஒரு நட்பு ஏற்படும் மிக நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்படும் இப்படித்தான் நமது நட்புகளின் ஆரம்பம் ஏற்படுகிறது, எத்துனை சொன்னாலும், வாதித்தாலும் பள்ளிபருவ காலத்து நடப்புகள் நமது வாழ்க்கை முழுவதும் அசைபோட்டுக்கொண்டே இருக்கும் அற்புத சக்தி வாய்ந்ததாகும், இதைத்தான் கவிஞர் வைரமுத்து தான கவிதை ஒன்றில் சொல்லி இரிக்கின்றார்

"அள்ளிக் கொடுப்பவைகள்
ஆண்டுகளால் அழிவதில்லை
பள்ளிப் பருவ நிலை
பழைய கதை ஆவதில்லை"

சுயநலமில்லாத தூய்மையான நட்பானது மெய்யிலேயே போற்றத்தக்கது, வாழ்த்ததக்கது, நல்ல நட்புக்களால் அறிவு விருத்தி அடையும், சமூக சிந்தனை விரிவடையும், இலட்சியம் பிறக்கும், நமது தடைகளை உடைத்தெறியும் மன தைரியம் கூடும், சந்தோசம் நூறு மடங்காகும், துன்பம் இல்லாமல் போய்விடும், விட்டுக் கொடுத்தலின் விவேகம் புரியும், வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிபர்ப்புகளும் அதிகரிக்கும்.............................இப்படி எத்தனையோ.......நல்ல விடயங்களுக்கு நல்ல நட்பு காரணமாகின்றது..

தூய்மையான நட்பில் எதிபார்ப்பு இருக்காது, சுயநலம் இருக்காது, சந்தர்ப்பவாதம் இருக்காது, வஞ்சகம்
இருக்காது, முதுகு சொரியும் முட்டாள் தனம் இருக்காது, முகஸ்துதி இருக்காது..பெற்றோர்கள் சொல்வதை கேட்காதவர்கள் நண்பன் சொல்வதை கேட்கின்ற வலிமை நட்பில் மாத்திரம்..........தான் சாத்தியம்..
நண்பர்கள் நம்மைப் பற்றி.......நாமே மத்திப்பீடு செய்து கொள்வோம், நமது நட்பு உலகம் நிஜமானதா? போலியானதா? நாம் எப்படிப்பட்டவர்கள்? நமது நண்பர்களோடு எப்படி இருக்கிறோம்...............

கடைசியாக..இதை வாசிக்கின்ற எல்லா பதிவுலக நட்புள்ளங்களுக்கும் சுயநலமில்லா நண்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்..


ஆனால் மலிவு விலையில் சுயனலத்திட்க்காக நம்மை நாடும் நட்புகளிடம் அவதானமாக இருப்போம்.

பிற்குறிப்பு- எனது ஒவ்வொரு பதிவுக்கும் தனது காத்திரமான விமர்சனத்தை வழங்கி வரும் புத்தளம்,எத்தாலையை சேர்ந்த நண்பர் இன்பாஸ் அவர்களுக்கு எனது நன்றிகள், நம்மை யாராவது அவதானிக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் நாம் அவதானமா பயணிப்போம் அந்தவகையில் இன்பாசின் தொடர் அவதானிப்பும், விமர்சனமும் தான் என்னை ஏதாவது பதிய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது........அவ்வாறே இராகலை கலை எங்கே போனார் இவர் இவர்தான் நான் வலைப் பத்திவில் நுழைய நூறு வீதம் காரணமானவர் இவருக்கும் எனது நன்றிகள்.

Read more...

வியாழன், 26 நவம்பர், 2009

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

உலகம் முழுதும் உள்ள எல்லா மனிதர்களும் கடவுளின் படைப்புக்கள் கடவுளை அடைய தமக்கு
சரி என்று பட்ட மதத்தை தேர்ந்தேடுத்துக்கொண்டனர் , ஆனால் உலகில் அதிகமானவர்கள்
மத நம்பிக்கையில் உள்ளவர்கள் என்ற எடுகோளுக்கு வரமுடியும் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன்
,தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், கருப்பன் வெள்ளையன், இந்த பாகு பாடுகளையும் தாண்டி மனிதர்கள்
எல்லோரும் சமமானவர்கள் என்கின்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத கடமைதான் இஸ்லாத்தின்
ஐந்தாவது கடமை ஹஜ் ஆகும், இந்தவகையில் ஹஜ்ஜிப் பெருநாளை கொண்டாடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும்
நல்ல மனம் படைத்த எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

மலுரும் இந்தப் பெருநாளில் சமாதானமும், அமைதியும் வேண்டி பிரார்த்திப்போமாக, முடிந்தால் வாங்களேன் பெருநாள் பலகாரம்
சாப்பிடலாம்........பதிவுலக நண்பர்களே.. உங்களைத்தான்............

Read more...

செவ்வாய், 17 நவம்பர், 2009

புரிந்துணர்வு ஒன்றே காத்திரமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும்.

இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சமாதானம், எல்லா தரப்பினரும் சமாதானம் பற்றி கதை அளக்கின்றனர் , சமாதானத்திட்காக தாம் பாடுபடுவதாக குரல் உயர்த்தி கூறுகிறனர், ஆனால் அவர்களின் சமாதனத்திட்கான முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமானதாக அல்லது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை இது உலகளாவிய ரீதியில் நிறுவக் கூடிய வெளிப்படை உண்மையாகும் . இதனை சர்வதேச ரீதியில் ஆகட்டும், அல்லது உள்நாட்டில் ஆகட்டும் இதுதான் பொதுவான விதியாக, நியதியாக காலாகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது , இதெற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தான் என்ற அகங்காரத்தில் அடுத்தவரை ஆளும் வர்க்கமாக தம்மை நினைத்து ஆட்டம் போடுவதுதான் , இது சாதாரண ஒரு குடும்பத்தில் தொடங்கி சர்வதேசம் மட்டுக்கும் இதுதான் நிலை. ஒரு குடும்பம் அடுத்த குடும்பத்தை ஆள நினைக்கின்றனர், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஆள நினைக்கிறது, ஒரு கிராமம் இன்னொரு கிராமத்தை ஆள நினைக்கிறது , ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆழ நினைக்கிறது இந்த போக்கு நிலையான சந்தேகத்தையும், பரஸ்பரம் குரோதத்தையும், அடுத்தவர் மீது அவநம்பிக்கையையும் பரவலாக ஏற்படுத்தி உள்ளது , இந்த அவலமான போக்கு உலகெங்கிலும் ஒரு சீரற்ற தன்மையை ஏற்படுத்தி இதன் முற்று முழுதான தாக்கத்தின் கீழ் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதி நிதிப்படுத்தும் மக்கள் ஆட்பட்டு இருப்பதையும் அவதானிக்கலாம்,

இலங்கை, இந்தியா , பாகிஸ்தான், நேபாளம், ருவண்டா, உகண்டா, சோமாலியா. எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ............இப்படி உலகில் உள்ள தொண்ணூறு சதவீத மான நாடுகளில் வாழும் மக்கள் தமது நிம்மத்தியை தொலைத்து தினமும் பயந்து பயந்து நாட்களை கடத்துகின்றனர். சர்வதேச அளவில் பல நூறு காரணங்களுக்காக உருவெடுத்திருக்கும் இந்த நிம்மத்தியற்ற தன்மையை நம்மால் மாற்ற இயலாதாகும், ஆனால் நம்மை சுற்றி யுள்ள இந்த அவலங்களிலிருந்து நமக்கு சற்று விடுபட்டு, கொஞ்சம் சந்தோசிக்க முடியும். அதற்க்காக நாம் தயாராக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தில் இருக்கிறோம்.
ஆம் நண்பர்களே, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, அடுத்தவர்களை புண்படுத்தாத அழகான வார்த்தைகள், எந்த மதத்தவர்களையும் மதிக்கும் , கண்ணியப் படுத்தும் மேன்மை, அடுத்தவர்களின் கருத்துகளையும் செவி மடுக்கும் பக்குவம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடுகளையும் தாண்டிய மனித நேசம் , அடுத்தவருக்கு உதவும் இரக்கமுள்ள மனம், குறிப்பாக நம்மை ஆட்டிப்படக்கின்ர ஈ-கோ வுக்கு குட் பை சொல்லுதல்....... இப்படி நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும், காலப்போக்கில் நமது நண்பர்கள், உறவிவ்னர்கள், பக்கத்து வீட்டார்கள் , என்று நம்மை சுற்றி நம்மை நேசிக்கின்ற , அன்புள்ளங்கள், தானாகவே உருவாக அது எதுவாக அமைந்து விடும்,
நமக்குள் அமைதியும், நிம்மதியும், வேண்டுமெனில், நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும் என்ற பொன் மொழியைத்தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன, மதங்களின் இந்த நல்லுப தேசங்களே நமக்கு நிம்மதி அளிக்க போதும் என்கின்ற போது மதத்தின் பெயரால், குலத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால் நாம் பிளவு பட்டு இன்றைகளின் நிம்மத்தியையும், சந்தோசத்தையும் இழந்து தவிக்கிறோம், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம், ஒப்புக்காகவேனும் ஒரு புன்னகையை தவள விட நம்மால் முடிவதில்லை, புன்னகை தான் அன்பின் அடி நாதம் ஆகும்,
எழுத்தாளர்கள், சமூகத்தின் சிற்பிகள் ஆவார்கள்( இப்போது வலை பதிவாளர்களும் தான்) அந்த வகையில் நமக்கான சமூகப் பொறுப்பினை நாம் உதாசீனம் செய்ய முடியாது. சாதாரண மக்களை ஓன்றுபடுத்தும், அல்லது அவர்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கையை உண்டு பண்ணும் முயற்சியில் நாம் நமது படைப்புக்களை தரவேண்டும், இதற்கும் முன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வும், ஒற்றுமையும், வளர வேண்டும், எத்துனை கருத்து மோதல்கள், முரண்பாடுகள் நமக்குள் இருப்பினும் நாம் இதையும் தாண்டிய அன்னியோன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ..........இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நம்மில் சிலர் தன்னம்பிக்கை இழந்து செயற்படாமல் இருப்பதால் தான் எதையும் நம்மால் சாதிக்க முடியாமல் இருக்கிறது..... அவரவர் தனித்துவத்தை இழக்காமல் நாமும் கொஞ்சம் நல்லவர்களாக ஐ-மீன், அடுத்தவர்களை மதித்து கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமா..நண்பர்களே....................

Read more...

புதன், 11 நவம்பர், 2009

எது தேச பக்தி...?

சில மாதங்களுக்கு முன்னால் எனக்கு வந்த இந்த கடிதம்...


“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?


நன்றி...
சங்கர்.

2009/11/10 stalin felix

Read more...

புதன், 4 நவம்பர், 2009

இருக்கிறம்+வலை பதிவர்=0

எல்லோரும் போலவே மனசு நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு "இருகிறம்"
ஏற்பாடு செய்த வலை பதிவாளர் சந்திப்புக்கு நானும் சென்றேன், அதிகமான ஆர்வக்கோளாறு என்னை ஆட்டிப்படைக்க கொஞ்சம் நேரம் காலத்துடனையே ஆஜராகி விட்டேன், டொரிங்டன் இல் வைத்து நண்பர் வதீஸ் என்னோடு இனணந்து கொண்டார், என் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் ஆப்பு வைப்பது போல வானம் சிணுங்க தொடங்கியது, சிறுது நேரத்தில் பதிவர்களின் வருகை அதிகரித்தது, எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிரும் சமனுமான மறு தாக்கம் உண்டு என்ற நியுட்டனின் மூன்றாவது விதியைப்போலவே பதிவர்களின் வருகை அதிகமாக தூறல் அதிகரித்தது, மன்னர் அமுதன் தனது சக பதிவர் குழாமுடன் வந்திருந்ததார், யோ.. வொயிஸ் .......... அநியாயத்திக்கு அமைதி காத்தார்....... அடிக்கடி தனது மந்திர புன்னகையினை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.....மேமன் கவி, டாக்டர்.எம்.கே. வுடன், பலதும் பத்தும் பெசிக்கொண்டார்கர்கள்.

பதிவர்களுக்கான முதலாவது அமர்வு உள்ளக அரங்கினுள்ளும்(மழை காரணமாக)
இரண்டாவது அமர்வு திறந்த வெளி அரங்கிலும் நடை பெற்றது, மழையையும் கருத்தில் கொள்ளாது இருக்கிறம் குழுவினர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்(பதிவர்கள் மீது அத்தனை பாசமாம்).....

முதலாவது நிகழ்வில் கதாநயகி திருமதி சாந்தி சச்சிதானந்தம் கலக்கினார். பதிவர்கள், பார்வையாளர்கள் அறிமுகத்தை தொடர்ந்து இருக்கிறமின் கொள்கை, கோட்பாடு, பற்றிய மிகத்தெளிவான விளக்கமொன்றைத்தந்தார், பின்னர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் உரை ஆற்றினார்....

இரண்டாவது அமர்வு தூறல்களை கட்டுப் படுத்த போடப்பட்டிருந்த கூடாரங்களின் கீழ் கடி,குடியுடன் ஆரம்பமாகியது.. நண்பர் லோசன் அழகாக பேசினார்..(சத்தியமா),
பின்னர், பத்திரிக்கை ஆசிரியரின் அறுவல் வெறுத்துப்போன விஷயம் அதுதான்.
தமிழ் எழுத்துப்பிழைகள் அதிகமாக விடும் அவரது பத்திரிகையை திருத்துவதை விடுத்து பாவம் அந்த மேதாவி பதிவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். எல்லாம் கலிகாலம், அந்த மேதாவியை யாரும் பேசக்கூப்பிடுவது இல்லை போலும் மனிசன் முடியுமான வரைக்கும் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவம் அவர் இருக்கிறமாவது அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரது நீண்ட மிக நீண்ட நாள் ஆதங்கத்தை தேர்த்துக்கொள்ள களம் அமைத்துக்கொடுத்தது.. மேதாவியின் பேச்சின் போதே கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது... நம்ம பதிவர்கள் பலர் தமது பதிவுகள் பற்றிய கலந்துரையாடலில் மூழ்கிப்போயிருந்தனர், நாகரிகம் கருதி சில மூத்த பத்திரிகையாளர்கள்,சில பதிவர்கள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவ்வளுதான். தனது ஆதங்கங்களை கொட்டி (எம் தலையில்) தீர்த்துக் கொண்டு அவர் ஓய்ந்தார்,

இதற்கிடையில் வெளி நாட்டிலிருந்து இளைய தம்பி தயானந்தா, குருபரன் ஆகியோர் பேசினார்கள், குருபரன் ரெம்பவும் அறுத்தார்... பாவம் லூஸ் போலுக்கு சிக்ஸர் அடிக்கும் பாணியில் விளாசினார்... கேட்பவன் கேனயனா இருந்தா எருமைமாடு கூட ஏரப்பிலன் ஓட்டுமாம் அப்படித்தான் இருந்தது எல்லாமே, இதற்கிடையில் குடி,குடி .....சிலர் ஆனந்தப் பட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்ற கேள்வியே இல்லாமல்............இருக்கிறம்+வலைப்பதிவர் சந்திப்பு =௦௦0 இல் முடிந்தது................
எல்லாம் நம்ம தலை விதி தான் ...................

Read more...

வெள்ளி, 30 அக்டோபர், 2009

அந்த நாள் எப்ப வரும்.


படத்திலிருப்பது என் மகள் பாத்திமா மரியம்.

(நான் கத்தாரில் வேலை செய்த காலப்பகுதியில் என்னோடு வேலை செய்த இலங்கை, ஏறாவூரை சேர்ந்த நண்பன் ராபி இன் வேண்டுகோளுக்கு இணங்க எழுதிய கவிதை இது நண்பர் ராபி இன்னும் கத்தாரில் தான் இருக்கிறார் நான் இப்போது இலங்கையில்)

பொத்திவச்ச செம்பகப் பூ
பொசுக்கென்று பூத்ததுபோல்
என்ன சுத்தவச்ச பேரழகே
அங்கே-நீ சுகமா சுகமா.

ஒத்தையில என்மனசு
ஒன்ன மட்டும் நெனக்குதிங்கே
மெத்தையில படுத்தாலும்
என் நெனப்பெல்லாம் நீ தாண்டி.

காலையில எழுந்தாலும்
சாலையில நடந்தாலும்
கோலமயில் உன் உருவம்
என்னைக் கொள்ளாம கொல்லுதடி.

மாலையில வானத்தில
மஞ்சள் நிலா பார்க்கையில!
சோலைக்கிளி நீ தாண்டி-அங்கே
குத்தவச்சி குந்திருக்க.

நள்ளிரவு நேரத்தில நான்
நலமற்று தூங்குகையில்
கள்ளி உந்தன் கரங்கள் தான்
எந்தன் கனவினிலே தலை தடவும்.

துள்ளி வரும் காற்றிடத்தில்
நான் தூது ஒன்று சொல்லிவிட்டேன்.
கள்ளி உந்தன் காதுகளுக்கு
செய்தி முழுசாக வந்திச்சா...

நம் செல்ல மகள் நினைவுகள்
என்னை செல்லாக அரிக்கிறது
சொல்லி அழ ஆருமில்லை-இங்கே
சோகத்திற்கு பஞ்சமில்லை.

சொல்லி என்ன பயனிருக்கு
சோகத்தில் நான் கிடக்கேன்.
அள்ளி ஒன்ன முத்தமிடும்
அந்த நாள் எப்ப வரும்.

Read more...

வியாழன், 29 அக்டோபர், 2009

புதிய முயற்சி...

Read more...

சனி, 24 அக்டோபர், 2009

கெகிராவ சுலைஹா எனும் ஆளுமை.....




கெகிரவ சுலைஹா நவீன பெண்ணியம் சார் திசையில் ஆழமான மனப்பதிவுகளை நிறுவி நிற்பவர், மிக நீண்ட காலமாக எழுதிவரும் இவர் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதியது மிக மிகக் குறைவு..ஆனால் இவரது எழுத்துக்களில் உள்ள வீரியமும், ஆழமும் அற்புதமானது.ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கான அருமை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை இந்த வகையில் மொழி பெயர்ப்பு இலக்கியம் தொடர்பில் தனது அவதானத்தை கெகிராவ சுலைஹா செலுத்தியுள்ளார் என்பது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும், தொடர்ந்தும் மல்லிகையில் அவரது மொழி பெயர்ப்பு கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ள நிலையில் தனது இலக்கியப் பதிவை நிறுவும் முகமாகவும், மொழி பெயர்ப்பு ஆளுமையை வெளிக்காட்டும் முகமாகவும் அண்மையில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய தொகுதியான "பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்" எனும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர் எழுத்தாளர் கெகிராவ சகானாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வியாழன், 15 அக்டோபர், 2009

தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர்


தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்..."நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)
நன்றி- http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_6425.html"

Read more...

திங்கள், 12 அக்டோபர், 2009

இலங்கை சிற்றிதலாளர்களின் ஒன்றுகூடல்.

காலம்:- 24/10/2009
இடம் :- கொழும்பு தமிழ் சங்கம்- சங்ககரன் பிள்ளை மண்டபம்.

ஒக்டோபர் வாசிப்பு மாதத்தைமுன்னிட்டு இலங்கை சிற்றிதழ்களின் வளர்ச்சிப் பரப்பை விரிவுபடுத்தும் முகமாக, இலங்கை சிற்றிதழ்களின் அறிமுகமும், இதழாசிரியர்களின் சந்திப்பும் நடை பெறவுள்ளது, இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு
அந்தனி ஜீவா- (செயலாளர்)-0776612315

Read more...

சனி, 10 அக்டோபர், 2009

"சிறீதர் பிச்சையப்பா" எனும் கலைஞன் ...


நான் மிகவும் நேசிக்கின்ற, மதிக்கின்ற கலைஞர்களில் "சிறீதர் பிச்சையப்பா" வும் ஒருவர், ஏகப்பட்ட அனுபவங்களை தனது கலைத்துறை வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அற்புத கலைஞன் அவன், நிறைய திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் இன்னும் சரியான சந்தர்பம் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் வாழும் அற்புதக் கலைஞன் , இப்போது மித்திரன் வாரமலரில்-கலா பவனம் பகுதியை அற்புதமாய் எழுதி வரும் ஸ்ரீதர் தற்பெருமை இல்லாத, எளிமையான கலைஞன் , நம் நாட்டில் தட்டிக்கொடுப்பவர்களையும் விட , முதுகில் குத்தும் ஜால்ரா பார்டி களே அதிகம் ஸ்ரீதருக்கு இந்த அனுப்பவம் கிட்டியிருக்கிறது, ஒரு நல்ல கலைஞனை மதிக்க நமது இலக்கியப் பரப்பு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. 071-6611952.

Read more...

வெள்ளி, 9 அக்டோபர், 2009

எல்.வசீம் அக்ரமின் "ஆக்ரமிப்பின் கால் தடம்" கவிதை நூல்..






2000 களின் பின்னர் அனுராதா புர தமிழ் இலக்கிய பரப்பில் காலடியெடுத்து வைத்த எல்.வசீம் அக்ரம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர், இவரது முதலாவது கவிதைத் தொகுதியான "மண்ணில் துழாவும் மனது" என்ற தொகுதியானது தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த கவன ஈர்ப்பை பெற்றது, முதல் தொகுதி வெளியாகி மிக குறுகிய காலத்திலேயே தனது இரண்டாவது தொகுதியான "ஆக்கிரமிப்பின் கால் தடம்" என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு உள்ளார், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கடையாண்டு மாணவனான எல்.வசீம் அக்ரம் இன் இந்தத் தொகுதியும் தமிழ் இலக்கியப்பரப்பில் பேசப்படக்கூடிய சாத்தியப் பாடுகள் அதிகம் இருக்கின்றது.

தவிரவும் அனுராதபுர தமிழ் இலக்கியப்பரப்பனது இப்போதுகளில் மிகவும் அவதனிக்கத்தக்க களமாக விரிந்துள்ளது இவ்வருடம் மட்டும் சுமார் ஐந்து தமிழ் நூல்கள் இதுவரைக்கும் இப்பிரதேசத்தின் இலக்கிய ஆவணமாகவெளியாகி யுள்ளது


"பேனாவால் பேசுகிறான்"- நாச்சியாதீவு பர்வீன்.
"ஒரு ௯ டும் இரு முட்டைகளும்"- கெகிராவ சகானா.
"பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்"- கெகிராவ சுலைகா.
(ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள்)
"ஆக்ரமிப்பின் கால் தடம்" - எல்.வசீம் அக்ரம் .
"வேலியைத்தாண்டும் வேர்கள்"- நாச்சியாதீவு பர்வீன். எல்.வசீம் அக்ரம் . (அனுராதா புர மாவட்டத்து கவிஞர களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்)

Read more...

வியாழன், 8 அக்டோபர், 2009

எமது மலேசியா பயண நினைவுகளில்..






Read more...

புதன், 7 அக்டோபர், 2009

சல்மாவின் வரிகள்.

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப்
புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

"இரண்டாம் ஜாமத்துக் கதை" என்ற சல்மாவின் கவிதை யிலுள்ள சில வரிகள் தான் இவை ...பெண்ணியம் பற்றிய ஆழமான அவதானப் பதிவினை ஏறபடுத்திக் கொண்டு இருப்பவர்களில் சல்மாவும் மிக முக்கியமானவர், ஆணாதிக்க வெறிக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் இவர் இன்றுகளில் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப் படுகிறார், இயற்கை மீதான வெறுப்பும் கோபமும் இவரது இந்தக் கவிதையில் தெளிவாய் தெரிகிறது............

Read more...

திங்கள், 5 அக்டோபர், 2009

நதியோடு பேசுகிறேன்.


எனது தெருக்கள்
விரிந்து கிடக்கிறது..
அமைதியாக.

புதருக்குள்
ஒளிந்து கொண்டு..
வழி மரிக்கும்
எந்த ஜீவ ராசிகளும்
என்னை தொந்தரவு செய்ய வில்லை.

நீண்ட பரப்பாக
வயல் வெளிகள்
நிசப்த பொட்டலாக
படுத்திருந்தது அனாதையாக.

குருவிகளின்
சல சல பில்லாத
சோகக் கிடங்காக
இலையுதிர்ந்து போன
மரங்களின் மவுனம் ....

பசுமை தொலைத்த
வனத்தில்
எங்குமே மாற்றம் ...

என்ன கொடூரம் நடந்தது
இந்த வனத்திற்கு..

சோகத்தின் விரல்களை
சூப்பிய வண்ணம் நதிகள்...

எவனோ ஒரு மனிதன்
கடந்து போயுள்ளான்
இந்த வனத்தை...

எதுவுமே என்கேள்விகளுக்கு
பதில் தருவதாக இல்லை..

இப்போது நான்
நதியோடு பேசுகிறேன்.

நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

வியாழன், 1 அக்டோபர், 2009

இந்த புன்னகை என்னவிலை...?



இன்று உலக புன்னகை தினமுங்க ஆமா ...சத்தியமாங்க ...ஐயோ என்ன நம்புங்க ....உண்மைய நம்ப வெக்க இவ்வளவு கஷ்டமா அடக் கடவுளே ..............!


உலக புன்னகை தினமான இன்று நீங்க எல்லோரும் கொஞ்சமாவது மனசு விட்டு சிரிக்கணும், எளவெடுத்த பிரச்சினைகள் தலையை அமுக்கிக் கொண்டு இருக்கையில் எப்படிடா மனசு விட்டு சிரிப்பது ......மண்டு ...........மண்டு ..................என்று நீங்க என்னைய வாயார வாழ்த்துவது எனக்கு கேட்கிறது .....உங்கள் மனம் நொறுங்கிய வாழ்த்துக்களுக்கு நன்றிகள், இருந்தும் இதையெல்லாம் பார்த்தா நாலு பேருக்கு நல்லத செய்ய முடியுமா ......இவரு பெரிய அவரு நல்லது சொல்ல வந்துட்டாரு அப்பிடித்தான நினைக்கிறீங்க .................உங்க நினைப்பு ரெம்ப சரிங்க இருந்தும் இதுக்காக செத்துப் போன சாளி சாப்ளினையும் அணு விஞ்ஞானி அப்துல் கலாமையுமா கூட்டிக்கொண்டு வரமுடியும்...... நமக்குள்ள உள்ள குப்பனோ, சுப்பனோ, அப்துல் காதரோ, அந்தோனியோ தாங்க சொல்ல வேணும் அதனல்தான் இந்த நாச்சியாதீவு பர்வீன் உங்கள் முன்னால் ஆஜராகி உள்ளேன் அதை ஞாபகப் படுத்த ...ஆமா நண்பர்களே ...............


உலகத்திலே அழகாக புன்னகைக்கக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும் தான், அதிலும் நம்ம அம்மணிகள் புன்னகை ஒன்றினால் இந்த பூமியையே உருட்டி பெரட்டிப் போடக்கூடியவர்கள், இந்த புன்னகைக்குப் பின்னால் பல சாம்ராஜியங்கள் தலைகீழாக மாறியுள்ளது எல்லாப் பெருமையும் நம்ம அம்மணிகளுக்கு தானுங்கோ .........அவங்களுக்கு ஒரு ஒ .........போடுவோமா?


இந்த உலக புன்னகை தினத்தில வலைப்பத்திவலர்களான நாம எல்லோரும் சேர்ந்து ஒரு பிரார்த்தன செய்வோம் அதுதான் உலகத்தில உள்ள எல்லா ஜீவராசிகளும் சண்ட சச்சரவு இல்லாம சிரிச்சி சந்தோசமா விட்டுக் கொடுபோட ஒருவரை ஒருவர் மதிச்சி வாழுகின்ற ஒரு நிலையை தா ................ என்கடவுளேறு

எல்லோருக்கும் பொதுவான கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் .


அத்தோட ஒரு சிறு புன்னகையினால் உங்கள் ஆறடி அழகு உடம்பில் உள்ள .....ஆயிரக்கணக்கான நோய்கள் குணமாகுதாம். முகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நரம்புகள், நாடிகள், நாலம்கள் என்று எல்லாம் புது இரத்தம் பாய்ச்சப்பட்டு, புத்துணர்ச்சி பெறுகிறது இதனால் முகம் அழகும் புதுப் பொலிவும் பெறுகிறதாம் .........இதை நான் சொல்ல இல்லிங்க அமெரிக்காவின் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகள் சொல்கின்றன.......அது சரி நம்ம சொல்லி யாரு நம்ப போறான் ...................

ஆம் நண்பர்களே நம்ம புன்னகையரசி கே.ஆர.விஜயா, நம்ம சினேகா இவெங்க புன்னகையை கடன் வாங்கியாவது எதுக்குமே சிரிக்காதே சில சீரியஸ் பார்டிகளுக்கு கொடுத்தால் என்ன?..........................


என்றும் புன்னகையுடன்.

நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

எனது தெருக்களில் உனது வாசம் -01



நீ விட்டுச் சென்ற
காயங்களில்
எதுவுமே எனக்கு வலிப்பதில்லை

நினைவுச் சூரியன்
உறங்கும் நிமிஷங்களில்
ரேகை அழிந்த உனது
கனவுகளை
என்னில் புதைத்துச் சென்றாய்..

பூக்களின் மெல்லிய
அதரம் கொண்ட
உன் இதயத்தில்
எங்கே இருந்து வந்தது
விசக் காற்று.....
பெரும் கடல் வழியாக
கிளம்பி வரும்
உப்புச் சாரல் கலந்த
காற்றில் .......
சிறு துவானமாய்...
நீ தெறித்து காணாமல் போகிறாய்....
விடுதலை என்று
நினைத்து .......
விசப் பானம் அருந்தி.... பின்
துயரத்தை சுமந்த
உன் விழிகளை
மீண்டும் நான் சந்திக்க
தயாராக இல்லை......

உன் மீதான பரிவும்
உன் துயரம் பற்றிய
இரக்கமும்
என்னில் இன்னும்
கொஞ்சமாய் மீதமிருக்கிறது...

நாம் சந்திக்காத
ஒரு பொழுதில்
நீ கொஞ்சம்
மீட்டிப் பார்...
என்னை பற்றி .....
(இன்னும் வாசம் வீசும்......)




Read more...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனம் நிறைந்த பாராட்டு விழா...


கடந்த வெள்ளி கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் மனம் நிறைந்த பாராட்டு விழா ஒன்று நடை பெற்றது இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு கொடகே நிறுவனத்தினரின் விருது அண்மையில் மகாவலி கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது இவ்விருது தொடர்ந்தும் பதினோரு வருடங்களாக சிங்கள எழுத்தாளர் களுக்கு வழங்கப் பட்டு வந்தது, இம்முறை சிங்கள எழுத்தாளர்களுடன் சேர்த்து மூன்று தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது, டொமினிக் ஜீவா, ஏ.இக்பால், திருமதி கோகிலா மகேந்திரன் ஆகிய மூவருமே அவர்களாவார்கள், அந்த வகையில் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழாவை தெல்லிப்பளை இலக்கிய வட்டத்தினர் ஏட்பாடு செய்திருந்தனர், பெரும்பாலான இலக்கியவாதிகள், கல்வியியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிகமானோர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் இலக்கிய, உளவியல் ஆளுமைகளை பற்றி விவரணம் செய்தனர்.

Read more...

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

தோப்பில் முஹம்மது மீரானின் இலங்கை வருகை.

இந்தியாவின் பிரபல்யமான தமிழ் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் இலங்கை வருகை இலங்கை சார் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த பதிவு இறக்கம் செய்யப்படும் மட்டுக்கும் பெரும்பாலும் வெளி வராத செய்தியாகும் இன்று இரவு அவருடனான சந்திப்பு ஒன்றை நண்பர் ஒருவர் தெரிவித்தார். மேலதிக விபரங்களை நாளைய தினம் இங்கே பார்க்கலாம்.

Read more...

சிரட்டையும் மண்ணும் என்ற என் முதல் தொகுதி பற்றி

வறுமையோடு போராடும் வாழ்க்கை பாதி என்றால் போரோடு போராடும் வாழ்க்கை மீதி, போரின் அவலங்களும், கொடுமைகளும் நம்மீது திணித்து விட்டிருக்கும் மேலதிக சுமையும் இன்னும் இன்னும் நம்மை நமது பாதையில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது, அந்த வகையில் தமது தாய் மண்ணை விட்டு வெளியேறியவர்கள் அங்கே விட்டு வந்தது தாம் காலாதி காலமாக வாழ்ந்து வந்த மண்ணையும் தமது சிறுசுகள் விளைடி மகிழ்ந்த சிரட்டையும் மட்டும்தான், அந்த அழியா நினைவுகளின் அடையாளம் தான் இந்த
"சிரட்டையும் மண்ணும்".

Read more...

எமது மலேசியா பயண நினைவுகளில் ...

எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எமதான மலேசியா பயணம் முடிவாகியது இது இலங்கை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இடமிருந்து வலமாக.-ஹிசாம், நாச்சியாதீவு பர்வீன், வசீம் உஸ்மான், மற்றும் அஸ்வர்,.

Read more...

டொமினிக் ஜீவா என்ற அற்புத மனிதர்.

டொமினிக் ஜீவா மூத்த எழுத்தாளர் கே.டானியல்யைப் போலவே பஞ்சமர் இலக்கயத்தை ஓர்மையுடன் படைத்தவர் இவரது தண்ணீரும் கண்ணீரும் சிறுகதை தொகுதிக்கு இலங்கையின் சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது, இவரது அயராத அர்பணிப்பின் பயனாக மல்லிகை எனும் மசிகையை சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களாக தனியாள்முயற்சியாக வெளியிட்டு வருகிறார், எண்பத்தி மூன்று அகவையிலும் சுறு சுறுப்பு மாறாத இளைஞ்சனாக இலக்கிய மேடைகள் தோறும் இவரைக் காணலாம் , எளிமையும், அன்பும், பக்குவமும் நிறைந்த இந்த அற்புத மனிதர் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சக எழுத்தாளர்களை கணம் பண்ணவும், இளைய எழுத்தாளர்களை தட்டிக்கொடுக்கவும் என்றும் இவர் பின்நின்ற தில்லை, சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியம் படைத்தது வரும் இவர் பற்றிய ஆய்வுகள் எதிர் காலத்தில் மேம்படும் என நம்பலாம் -முடிந்தால் புதிய கதிரேசன் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை சந்த்தித்து கொஞ்சம் உரையாடிப் பாருங்களேன் கட்டாயம் தொலை பேசி மூலம் அவருடன் பேசி விட்டு போவது நல்லது -0112320721

Read more...

வியாழன், 24 செப்டம்பர், 2009

மரியம் என்ற மலர்.


இது எனது கவிதை
ஒரு வண்ணத்தி சிறகினிலும்
மென்மையான அதரம் கொண்ட
என் தேவதை இவள்.
ஒரு சின்ன பனித்துளியை
தழுவிக்கொள்ளும் மென் இதழ்
பூவாக என் நஸ்மியா வின்
அரவணைப்பில் என் மரியம்
உறங்கும் அழகே தனிதான்.
எந்த அழகு பற்றிய கணிப்பும் இப்போது
என்னிடம் இல்லை என் மகள் மரியத்தை
தவிர,....

Read more...

எனது மலேசியா பயணத்தில்...


எழுத்தாளர் சை.பீர் முஹம்மது உலக தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு அறியப் பட்டவர் மலேசியா வின் அடித் தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்சினை களை தனது படைப்புகள் கூடாக வெளிக்கொண்டு வந்ததவர் அண்மையில் நானும் எனது நண்பர்களான அஸ்வர் , வசீம் அக்றம், ஹிசாம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மலேசியா வுக்கு பயணம் செய்த நேரத்தில் நண்பர் திரு , ஞானசேகரன் அவர்களின் உதவியினால் நண்பர் சை. பீர் முஹம்மது அவர்களை சந்தித்து உரையாடினேன் நானும் நண்பர் ஹிசாம் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே அவரை சந்தித் தோம் , எளிமையான மனிதர், இலங்கை எழுத்தாளர் கள டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, மேமன் கவி , ஞானசேகரன்,ஜின்னா சரிபுடீன், என்பவர் களை பற்றி விசாரித்தார், அவரது அண்மைய சிறுகதை தொகுப்பான "பயஸ் கொப்காரனும் வான்கோழிகளும்" அன்புடன் கையளித்தார், உலக தமிழ் இலக்கிய பரப்பில் ஆராயப்பட வேண்டிய படைப்பாளிகள் வரிசையில் மலைசிய சை.பீர் முஹம்மதும் குறிப்பிட்டு கூறக்கூடியவர்.

நாச்சியாதீவு பர்வீன்,

Read more...

பழக இனிமையான மனிதர் மேமன்கவி



மேமன்கவி 1970 களில் ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் கவிஞ்சனாக அறிமுகமாகி தனது தணியாத தேடலின் பயனாக இன்றுகளில் தமிழ் இல்லக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கணிக்கப் படுகிறார்.


ஹிரோசிமாவின் ஹீரோக்கள், உனக்கெதிரான வன்முறை, மீண்டும் வசிப்பதற்காக, யுக ராகங்கள், இயந்திர சூரியன், நாளையநோக்கில் இன்றில் என்பன இவரது கவிதா விலாசங்களை அடையாளப் படுத்த வல்ல படைப்புகள் ஆகும். இவரது தொடர்பு களுக்கு -௦785128804


Read more...

எனது புதிய அறுவடை.

வாசித்துப் பாருங்கள் என் சார்ந்த உணர்வுகளை நீங்களும் உணர்வீர்கள். எனது கத்தார் வாழ்க்கை இல் நான் பெற்ற அனுபவங்களை எனது மொழி இல் சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு மொழி பெயர்க்க முடியாத புத்தகம் இருக்கும் நிறையப் பேருக்கு அதை சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் இருக்குமே தவிர அதை சொல்லும் வழி தெரிவதில்லை இப்படித்தான் எனது சிறுவயது நினைவுகள் எனது நண்பர்கள் அவர்களுடனான எனது அனுபவம் எனது பாடசாலை நினைவுகள் என்னை நேசித்தவர்கள், நேசிக்க மறந்தவர்கள் என்று சிலவிடயங்களை பரிட்சார்த்தமாக இதில் பதிந்துள்ளேன்.

Read more...

எனது மகள் மரியம்


எனது மகள் மரியம் பிறந்த போது எனது பேனா வழியாக இறங்கிய உணர்வுகள் தான் இவை, 23/05/2009.

அன்று இந்த மண்ணில் மலர்ந்த மலர்தான் எனது மகள் மரியம்.

Read more...

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by