Related Posts with Thumbnails

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மலிவு விலையில் நட்பு?



மலிவு விலையில் நட்பு?

நட்பு என்பது அலாதியான அனுபவமாகும், ஒரு "நல்ல நண்பன் கிடைப்பது ஆயிரம் பொற்காசுகள் கிடைப்பதை விடவும் மேலானது" என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி
"ஒருவனை அறிந்து கொள்ள அவனது நண்பனுடன் பழகிப் பார்" என்கிறது ஒரு முது மொழி
"நல்ல நண்பர்கர்களை தேடிக்கொள் உன் வாழ்க்கை சந்தோசமாக அமையும்" என்கிறது ஒரு அராபிய பழ மொழி.
எனவே இந்த உலகத்தில் தாய், தந்தை, உறவுகள் இவைகளின் அன்பானது இயற்கையிலேயே நமக்கு
கிடைக்கும் ஒன்றாகும் அதையும் தாண்டி பிறப்பிலே நமக்கு கிடைப்பதாகும், ஆனால் நட்பின் மூலம் கிடக்கும் அன்பும், நேசமும், புரிந்துணர்வும் மிகவும் வித்தியாசமானதாகும், அது புரிந்துணர்வின் அடிப்படையில் இடையில் நம்மோடு சேர்ந்து கொள்வதாகும் இருந்தும் .எள்ளுகளோடு புல்லுகளும் முளைப்பதுண்டு அப்படித்தான் சிலர் நட்பை கொச்சைப் படுத்தி விடுகின்றனர், சுயநலத்திற்காக நட்புக்கொள்ளுகின்றனர்., சந்தோசங்களின் போது கை குலுக்கி குதூகலிக்கும் இவர்கள் சிறு துன்பம் வரும் போது மெதுவாக நழுவி விடுவார்கள், இன்னும் சிலர் உள்ளார்கள் தமது தேவைக்காக மட்டும் வந்து நம்மோடு நட்புக் கொள்வார்கள் தேவை முடிந்தவுடன் கம்பி நீட்டி விடுவார்கள், இப்படி நட்பின் பேரில் நாடகமாடும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கின்றாகள்.

இதையும் தாண்டி நல்ல நட்பு. சந்தோசமானது, பாலகபருவ நட்பு, பள்ளிப் பருவ நட்பு, விடலைப் பருவ நட்பு, வாலிபப் பருவ நட்பு........... இப்படி நமது வாழ்நாளில் நாம் கடக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒருவகையில் நட்பும் நம்மை உரசிக்கொண்டும்,தாண்டியும் செல்கின்றது
நமது அன்றடங்களில் நாம் நிறையப் பேரை சந்திக்கின்றோம், சிலரை முன்பின் அறிந்திராமலே அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும் அவ்வாறே சிலர் மீது ஒரு நட்பு ஏற்படும் மிக நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்படும் இப்படித்தான் நமது நட்புகளின் ஆரம்பம் ஏற்படுகிறது, எத்துனை சொன்னாலும், வாதித்தாலும் பள்ளிபருவ காலத்து நடப்புகள் நமது வாழ்க்கை முழுவதும் அசைபோட்டுக்கொண்டே இருக்கும் அற்புத சக்தி வாய்ந்ததாகும், இதைத்தான் கவிஞர் வைரமுத்து தான கவிதை ஒன்றில் சொல்லி இரிக்கின்றார்

"அள்ளிக் கொடுப்பவைகள்
ஆண்டுகளால் அழிவதில்லை
பள்ளிப் பருவ நிலை
பழைய கதை ஆவதில்லை"

சுயநலமில்லாத தூய்மையான நட்பானது மெய்யிலேயே போற்றத்தக்கது, வாழ்த்ததக்கது, நல்ல நட்புக்களால் அறிவு விருத்தி அடையும், சமூக சிந்தனை விரிவடையும், இலட்சியம் பிறக்கும், நமது தடைகளை உடைத்தெறியும் மன தைரியம் கூடும், சந்தோசம் நூறு மடங்காகும், துன்பம் இல்லாமல் போய்விடும், விட்டுக் கொடுத்தலின் விவேகம் புரியும், வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிபர்ப்புகளும் அதிகரிக்கும்.............................இப்படி எத்தனையோ.......நல்ல விடயங்களுக்கு நல்ல நட்பு காரணமாகின்றது..

தூய்மையான நட்பில் எதிபார்ப்பு இருக்காது, சுயநலம் இருக்காது, சந்தர்ப்பவாதம் இருக்காது, வஞ்சகம்
இருக்காது, முதுகு சொரியும் முட்டாள் தனம் இருக்காது, முகஸ்துதி இருக்காது..பெற்றோர்கள் சொல்வதை கேட்காதவர்கள் நண்பன் சொல்வதை கேட்கின்ற வலிமை நட்பில் மாத்திரம்..........தான் சாத்தியம்..
நண்பர்கள் நம்மைப் பற்றி.......நாமே மத்திப்பீடு செய்து கொள்வோம், நமது நட்பு உலகம் நிஜமானதா? போலியானதா? நாம் எப்படிப்பட்டவர்கள்? நமது நண்பர்களோடு எப்படி இருக்கிறோம்...............

கடைசியாக..இதை வாசிக்கின்ற எல்லா பதிவுலக நட்புள்ளங்களுக்கும் சுயநலமில்லா நண்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்..


ஆனால் மலிவு விலையில் சுயனலத்திட்க்காக நம்மை நாடும் நட்புகளிடம் அவதானமாக இருப்போம்.

பிற்குறிப்பு- எனது ஒவ்வொரு பதிவுக்கும் தனது காத்திரமான விமர்சனத்தை வழங்கி வரும் புத்தளம்,எத்தாலையை சேர்ந்த நண்பர் இன்பாஸ் அவர்களுக்கு எனது நன்றிகள், நம்மை யாராவது அவதானிக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் நாம் அவதானமா பயணிப்போம் அந்தவகையில் இன்பாசின் தொடர் அவதானிப்பும், விமர்சனமும் தான் என்னை ஏதாவது பதிய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது........அவ்வாறே இராகலை கலை எங்கே போனார் இவர் இவர்தான் நான் வலைப் பத்திவில் நுழைய நூறு வீதம் காரணமானவர் இவருக்கும் எனது நன்றிகள்.

2 கருத்துகள்:

Unknown 11 டிசம்பர், 2009 அன்று AM 2:08  

//சுயநலத்திற்காக நட்புக்கொல்லுகின்றனர், //

வேண்டுமென்றே கொல்லுகின்றனர் என்று இட்டீர்களா அல்லது எழுத்துப்பிழையா?

சுயநல நட்புகள் அதிகரித்துவிட்டன தான்.
முகத்துக்கு நேரே பொய்முகங்களைக் காட்டி முதுகுக்குப் பின்னால் குத்தும் பலர் எங்கள் சமூகங்களில் இருக்கிறார்கள்.

மனிதன் என்றால் பிழை செய்வது என்று வரைவிலக்கணப்படுத்திவிடும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டார்கள்.
தாமாக மாறும்வரை காத்திருக்க வேண்டியது தான்.

(சொல் சரிபார்ப்பை எடுத்துவிடுங்கள். சொல் சரிபார்ப்பு இருந்தால் பின்னூட்டுவதற்கு பஞ்சிப்படுவார்கள்.)

நாச்சியாதீவு பர்வீன். 13 டிசம்பர், 2009 அன்று PM 8:23  

நன்றி கனககோபி
உண்மையில் அது எழுத்துப் பிழைதான்,
தவறை சுற்றிக்காட்டியமைக்கு நன்றிகள்.
உங்கள் பின்னூட்டளுக்கு நன்றிகள்.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by