Related Posts with Thumbnails

புதன், 4 நவம்பர், 2009

இருக்கிறம்+வலை பதிவர்=0

எல்லோரும் போலவே மனசு நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு "இருகிறம்"
ஏற்பாடு செய்த வலை பதிவாளர் சந்திப்புக்கு நானும் சென்றேன், அதிகமான ஆர்வக்கோளாறு என்னை ஆட்டிப்படைக்க கொஞ்சம் நேரம் காலத்துடனையே ஆஜராகி விட்டேன், டொரிங்டன் இல் வைத்து நண்பர் வதீஸ் என்னோடு இனணந்து கொண்டார், என் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் ஆப்பு வைப்பது போல வானம் சிணுங்க தொடங்கியது, சிறுது நேரத்தில் பதிவர்களின் வருகை அதிகரித்தது, எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிரும் சமனுமான மறு தாக்கம் உண்டு என்ற நியுட்டனின் மூன்றாவது விதியைப்போலவே பதிவர்களின் வருகை அதிகமாக தூறல் அதிகரித்தது, மன்னர் அமுதன் தனது சக பதிவர் குழாமுடன் வந்திருந்ததார், யோ.. வொயிஸ் .......... அநியாயத்திக்கு அமைதி காத்தார்....... அடிக்கடி தனது மந்திர புன்னகையினை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.....மேமன் கவி, டாக்டர்.எம்.கே. வுடன், பலதும் பத்தும் பெசிக்கொண்டார்கர்கள்.

பதிவர்களுக்கான முதலாவது அமர்வு உள்ளக அரங்கினுள்ளும்(மழை காரணமாக)
இரண்டாவது அமர்வு திறந்த வெளி அரங்கிலும் நடை பெற்றது, மழையையும் கருத்தில் கொள்ளாது இருக்கிறம் குழுவினர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்(பதிவர்கள் மீது அத்தனை பாசமாம்).....

முதலாவது நிகழ்வில் கதாநயகி திருமதி சாந்தி சச்சிதானந்தம் கலக்கினார். பதிவர்கள், பார்வையாளர்கள் அறிமுகத்தை தொடர்ந்து இருக்கிறமின் கொள்கை, கோட்பாடு, பற்றிய மிகத்தெளிவான விளக்கமொன்றைத்தந்தார், பின்னர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் உரை ஆற்றினார்....

இரண்டாவது அமர்வு தூறல்களை கட்டுப் படுத்த போடப்பட்டிருந்த கூடாரங்களின் கீழ் கடி,குடியுடன் ஆரம்பமாகியது.. நண்பர் லோசன் அழகாக பேசினார்..(சத்தியமா),
பின்னர், பத்திரிக்கை ஆசிரியரின் அறுவல் வெறுத்துப்போன விஷயம் அதுதான்.
தமிழ் எழுத்துப்பிழைகள் அதிகமாக விடும் அவரது பத்திரிகையை திருத்துவதை விடுத்து பாவம் அந்த மேதாவி பதிவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். எல்லாம் கலிகாலம், அந்த மேதாவியை யாரும் பேசக்கூப்பிடுவது இல்லை போலும் மனிசன் முடியுமான வரைக்கும் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவம் அவர் இருக்கிறமாவது அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரது நீண்ட மிக நீண்ட நாள் ஆதங்கத்தை தேர்த்துக்கொள்ள களம் அமைத்துக்கொடுத்தது.. மேதாவியின் பேச்சின் போதே கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது... நம்ம பதிவர்கள் பலர் தமது பதிவுகள் பற்றிய கலந்துரையாடலில் மூழ்கிப்போயிருந்தனர், நாகரிகம் கருதி சில மூத்த பத்திரிகையாளர்கள்,சில பதிவர்கள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவ்வளுதான். தனது ஆதங்கங்களை கொட்டி (எம் தலையில்) தீர்த்துக் கொண்டு அவர் ஓய்ந்தார்,

இதற்கிடையில் வெளி நாட்டிலிருந்து இளைய தம்பி தயானந்தா, குருபரன் ஆகியோர் பேசினார்கள், குருபரன் ரெம்பவும் அறுத்தார்... பாவம் லூஸ் போலுக்கு சிக்ஸர் அடிக்கும் பாணியில் விளாசினார்... கேட்பவன் கேனயனா இருந்தா எருமைமாடு கூட ஏரப்பிலன் ஓட்டுமாம் அப்படித்தான் இருந்தது எல்லாமே, இதற்கிடையில் குடி,குடி .....சிலர் ஆனந்தப் பட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்ற கேள்வியே இல்லாமல்............இருக்கிறம்+வலைப்பதிவர் சந்திப்பு =௦௦0 இல் முடிந்தது................
எல்லாம் நம்ம தலை விதி தான் ...................

2 கருத்துகள்:

மன்னார் அமுதன் 4 நவம்பர், 2009 அன்று PM 10:47  

நல்ல பதிவு அண்ணா,

//முதலாவது நிகழ்வில் கதாநயகி திருமதி சாந்தி சச்சிதானந்தம் கலக்கினார். பதிவர்கள், பார்வையாளர்கள் அறிமுகத்தை தொடர்ந்து இருக்கிறமின் கொள்கை, கோட்பாடு, பற்றிய மிகத்தெளிவான விளக்கமொன்றைத்தந்தார்//


”இருக்கிறம்” தமிழ் பேசுபவர்களின் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்காமல் விட்டாலும் பரவாயில்லை. அதனை சீரழிக்காமல் இருப்பதே சிறப்பு.

குடிக்கப் பழகாத பல பச்சிளம் பதிவர்களையும், குடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் நிகழ்வாக இருந்ததை பதிவர்கள் பலரும் கண்டித்து, தமது கண்டணங்களைத் தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது

தங்கள் பதிவிற்கு நன்றி

நாச்சியாதீவு பர்வீன். 10 நவம்பர், 2009 அன்று AM 12:58  

நன்றி அமுதன், உங்களது ஆழமான பார்வைகள் சமூகம் சார் அவதானத்தை தெளிவு படுத்துகிறது.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by