Related Posts with Thumbnails

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஒரு கலைஞனின் கடைசி நிமிடம்..(வாசகனின் வாக்கு மூலம்)


ஸ்ரீ தர்பிச்சையப்பா, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் தான் எனக்கு பழக்கமானார் பாடசாலை காலங்களில் வானொலியிலும், டிவி யிலும் அவரை கண்டு ரசித்ததுண்டு பிற்பட்ட காலங்களில் தொழில் நிமித்தம் கொழும்பில் வசிக்க நேர்ந்தது அத்தோடு இலக்கியத்துறையுடனான தொடர்புகள் என்பன எனக்கு பலரின் அறிமுகத்தை தந்தது. அந்த வகையில் அறிமுகமாகமான ஒரு அன்புள்ளமானவர்தான் ஸ்ரீ தர் . ஸ்ரீதர் அற்புதமான கலைஞர்.
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களான எல்.வசீம் அகரம், நிந்தவூர் சிப்லி, துறையூரான் அசார்தீன்ஆகியோரின் நூல் வெளியீடு ஒன்றாக கொழும்பு தமிழ் சங்கத்தில் நடை பெற்ற போது அந்த நிகழ்வுக்கு ஸ்ரீதரும் வந்திருந்தார் நிகழ்வுகள்
முடிவடைந்ததன் பின்னர், நிறையப் பேர் அறிமுகமானார்கள் அந்த நிகழ்வுக்கு ஸ்ரீ தரும் வந்திருந்தார், நான்அருகில் சென்று நீங்கள் ஸ்ரீதர் தானே என்று கேட்டேன்.
ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒருவர் மிகமிக சிம்பலாக அந்த நிகழ்வுக்கு வந்திருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கை குலுக்கி நீதானா அது? நானும் நினைத்தேன் ஒரு பொம்புலபுள்ள என்று நகைச்சுவையாக கூறினார். எனது பெயர் பெரும்பாலும் பெண்களுக்கும் வைக்கப் படுவதால் இந்த பிரச்சினை பல தடவை எனக்கு வந்துள்ளது,

பின்னர் அன்றைய தினம் நான், ஸ்ரீதர், பாயிஸா கைஸ், வெலிகம ரிம்ஸா முஹம்மது, குமாரி மற்றும் இன்னொரு நண்பி பெயர் ஞாபகமில்லை ஒரு சாலையோர சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தினோம், எழுத்தாளர் பாயிஸா கைஸ் பில் ஐ செலுத்தினார், ஒரு இருபது நிமிட நேர அரட்டையின் பின் எல்லோரும் விடை பெற்றார்கள் நானும் ஸ்ரீதரும் மெதுவாக வந்து வெள்ளவத்தயில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்னால் உள்ள பஸ் ஹோல்டில் அமர்ந்து பலதும் பத்தும் பேசினோம் எனது "சிரட்டையும் மண்ணும்"
கவிதைத் தொகுதியை ஸ்ரீதருக்கு வழங்கினேன், அன்றைய தினம் இரவு பத்து மணி மட்டுக்கும் எங்களை அறியாமல் பேசிக்கொண்டே போனோம்.

அதன் பிறகு அவ்வப்போது நாங்கள் சந்தித்து கொண்டோம், எப்படியும் கிழமையில் ஒரு தடவை சந்திப்பது வழக்கம், ஸ்ரீதரின் மூலமாக நிறைய நண்பர்களை நான் அடைந்துள்ளேன், ஸ்ரீதர் மிக நல்லவன், சின்னப் பிள்ளை மாதிரி, அடுத்தவரை மதிக்கின்ற மனிதாபிமானி, சில்லை யூர் செல்வராசனுக்கு பிறகுள்ள ஒரு சகல கலா வல்லவன், என்ன தெரியாது ஸ்ரீதருக்கு? வஞ்சகம் தவிர
கடைசியாக கடந்த பதினேழாம் திகதி புதன் கிழமை அல்லது அதற்கு முதல் நாள்
இரவு ஸ்ரீதருடன் கதைத்தேன், அந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்ற வெலிகம ரிம்சாவின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமைக்கு தனது வருத்தத்தை தெரிவித்த ஸ்ரீதர் எமது புத்தக வெளியீட்டுக்கு வருவதாக கூறினார், கடைசியில் எல்லாம் கனவாகவே முடிந்து போய விட்டது .
பகிர்ந்து கொள்ள பலவிடயங்கள் உண்டு ஸ்ரீதரைப் பற்றி .....
இன்று கலாபவனத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீதரின் புகழ் பாடும் பெரியமனிதர்கள் ஸ்ரீதர் நோய் வாய்ப பட்டிருந்த போது கண்டு கொள்ளவில்லை என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரிந்த உண்மையாகும்.
ஸ்ரீதரின் பூ(த) உடலை பார்வையிட கலாபவனத்திட்கு வந்திருந்த கவிஞர் கிண்ணியா அமீர் அலி சொன்ன கவிதை இது...

ஸ்ரீ தரா!
இன்று நீ ..
"சிரி" தரா
ஸ்ரீதரா..
இன்று உனக்காக
எல்லோரும்
அழுதரா?
நிலா வானத்தில்
நீந்திக் களித்த நாள்
நினைவுகளை ....
கலா வானத்தில்
கலந்து தந்தவனே
இன்று ...
கலாபவனத்தில்
கண்ணுறக்கம் கொண்டனையோ?
-கிண்ணியா அமீர் அலி-

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை வரிகள்

உன்
மதி விட்டுப் போயும்
விதி விட்டுப் போகவில்லை
கலை வாழ்வில்
விலை போகாத நண்பனே
நீ முன்னால் போ..
பின்னால் நாங்களும்..

கண்ணீருடன் நான் நாச்சியாதீவு பர்வீன்.

4 கருத்துகள்:

மன்னார் அமுதன் 24 பிப்ரவரி, 2010 அன்று AM 2:01  

உருக்கமான பதிவு அண்ணா.

பல்கலைத் தென்றல் - நீ
பாசத்தில் அன்றில்
பழகிய நேசம் - என்றும்
வலிக்குமே நெஞ்சில்

ஸ்ரீதர் அண்ணாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனை செய்கிறேன்.

M.Rishan Shareef 26 பிப்ரவரி, 2010 அன்று AM 7:21  

அன்பின் பர்வீன்,

நண்பர் ஸ்ரீதர் பிச்சையப்பாவை இழந்து தவிக்கும் உள்ளங்கள் ஆறுதல் பெறட்டும்.

நண்பர் கிண்ணியா அமீரலியின் உடனடிக் கவிதை ஆச்சரியப்படுத்துவதோடு அவரது திறமையையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அவருடன் முன்பு கடிதம் மூலம் தொடர்பு இருந்தது. அவருக்கு இப்பொழுது நினைவிருக்குமோ தெரியாது. அவரது கடிதங்களைத் தாங்கி வரும் உறையில் அழகான, அருமையான கவிதைகளை எழுதியனுப்புவார்.

பழைய காலங்களை மீட்டச் செய்தது உங்கள் பதிவு. நன்றி அன்பு நண்பரே !

Unknown 28 பிப்ரவரி, 2010 அன்று AM 12:03  

விட்டு சென்ற என் அச்சு அப்பி க்கு
என் கண்ணீரை தவிர வேறுஎதுவும்
மிச்சமில்லை என்ன்றிருந்தேன்
நீ விட்டு சென்ற சொந்தங்களின்
அரவணைப்பில் சுகமாய் தேடுகிறேன் உன்னை
உன் இழப்பை ஈடு செய்ய இயலாமல்
தவிக்கும் உன் நண்பனின் இடுகை இது.

நன்றி பார்வின் அண்ணா...........!

நாச்சியாதீவு பர்வீன். 1 மார்ச், 2010 அன்று AM 4:08  

மன்னார் அமுதன், ரிஷான் ஷெரீப், அமிர்தவர்சி ஆகியோரின் வருகைக்கு என் நன்றிகள், ஸ்ரீதர் ஒரு அற்புதக் கலைஞன் அவனின் ஆளுமைகளை இங்குள்ள சில ஆமைகளுக்கு விளங்கவில்லை
இனி விளங்காது..இனி விளங்கித்தான் என்ன செய்ய?.........

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by