Related Posts with Thumbnails

திங்கள், 15 பிப்ரவரி, 2010

சாமத்து கனவுகள்...


கனவுத் தூரிகை
படம் வரைந்து
வாழ்க்கைக் குறிப்பில்
பதிந்து வைக்கும்

சேவல்கள்
உறங்கிப் போய்விட்ட
நடுச்சாமத்து
நிமிசங்கள்
இருளில் புதைந்து
அமைதி காக்கும்

தூரத்தில்
சில்வண்டுகளின் ஓசை
இருந்தும்
காதுகளுக்கு
எதுவும் கேட்காது

சோம்பல் முறித்து
மெல்லச் சிணுங்கும்
மகளின் அதிர்வுகளால்
மனைவியும் நானும்
கண் விழிப்போம்

மனைவியின் தாலாட்டிட்கு
அசைந்து கொடுக்காமல்
அழும் மகளின் அதரங்களை
நானும் மனைவியும்
தட்டிக் கொடுப்போம்

என்னையும் மனைவியையும்
மாறி மாறி பார்த்துக்கொண்டே
சிரித்தும் அழுதும்
விளையாடியும்
என் மகள் நேரம் கடத்துவாள்

மகளின் விளையாட்டுடன்
சில இரவுகள்
விடிந்தும் போய் உள்ளன

என் உம்மாவும் வாப்பாவும்
என்னோடும்
இப்படித்தான்
காலம் கடத்தியிருப்பார்கள்

சாமத்தில் எப்படி
கனவு காண்பது
விளித்திருகையில்
இருந்தும்
விழித்திருத்தல்
பிடித்தித்திருகிறது
என் மகளுக்காக.............

2 கருத்துகள்:

மன்னார் அமுதன் 15 பிப்ரவரி, 2010 அன்று PM 10:03  

அருமையான கவிதை அண்ணா. அப்பாவாகும் போதோ அல்லது அப்பாவை இளந்த பின்போ தான் அப்பாவின் அருமைகள் விளங்கும்.

தங்கள் பிள்ளைகளுக்காக அவர்கள் செய்யும் தியாகம் அளப்பரியது. அனுபவித்திருக்கிறீர்கள்.

நாச்சியாதீவு பர்வீன். 16 பிப்ரவரி, 2010 அன்று AM 4:21  

நன்றி அமுதன், நம் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எமது பெற்றோரின் உழைப்பு உள்ளது. அவர்கள் ஏணிகள் ஆனால் ஏறுவதில்லை.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by