செவ்வாய், 19 நவம்பர், 2013
ஞாயிறு, 3 நவம்பர், 2013
என் மரணம்.....
இலையுதிர் காலத்தில்
சத்தமில்லாமல்
உதிரும் ஒரு இலைபோல
எனதுயிரும் ஒரு நாள்
பிரிந்து போகும்
மரங்கொத்திப் பறவைகளின்
டொக் டொக் ஒலியினையும்
சில் வண்டுகளின்
இறைச்சல்களையும்
இன்னும் தேனீ க்கலின்
ரீங்காரத்தையும்
எனது செவிகள் அப்போது
உணரமாட்டா .....
ஒரு அதிகாலையோ
அல்லது அந்திப்போழுதோ
இல்லை ஒரு கும்மிருட்டோ
எனது உயிர் பிரியும்
நேரமாக இருக்கலாம்
இன்றோ
அல்லது நாளையோ
இன்னும் சில நாட்களின் பின்போ
எழுதப்பட்ட பிரகாரம்
நான் மரணித்துப் போவது உறுதி
என் மரணம்
உறவுகளுக்கு
இழப்பாகவும்
நண்பர்களுக்கு
கவலையாகவும்
என் எதிரிகளுக்கு
சந்தோசமானதாகவும் இருக்கும்
தொலைந்தான் சனியன்
என்று எதிரிகள்
சந்தோசிக்க
இறுமாப்பும் ஆணவமும்
அவர்களுக்குள்
பிரவாகித்து ஓடும்
என் மீது சாமரம்
வீசிய உறவுகள்
என்கபுருக்கு மேலால்
பூமரம் நாட்ட முனைவார்கள்
நண்பர்களோ
என் இழப்பின் உஸ்னத்திலிருந்து
வெளிவர முயற்சிப்பார்கள்
ஊரவர்கள்
இன்னொரு மரணம் வரைக்கும்
என்னைப்பற்றி
பேசுவார்கள்
எப்போதும் கண்ணீர் விட்டு
நிரப்ப முடியாத
குவலையொன்ராக
தேம்பித் தேம்பித்
அழும் எனது கவிதைகள்
அதன் மரணம் மட்டும்
நாச்சியாதீவு பர்வீன்.