Related Posts with Thumbnails

திங்கள், 19 செப்டம்பர், 2011

காயல் பட்டின கசமுசாக்கள்

கயல்பட்டின மாநாட்டின் பின்னர் அதுபற்றிய அலசல்கள் பரவலாக வந்தது இப்போது அதுபற்றிய தொடர் எனது வலைத்தளத்திலும் எழுத்தாளர் அஸ்ரப் ஷிகாப்தீன் அவர்களின் வலைத்தளத்திலும் அதே கட்டுரை எங்கள் தேசம் பத்திரிகையிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது இந்த வகையில் எனது காயல் பட்டின மாநாடு பற்றிய கட்டுரைகள் எங்கள்தேசம், ஜீவநதி, படிகள் போன்ற வற்றில் வெளியாகின அதில் எனது கட்டுரை திரு மானா மக்கீன் அவர்களை விமர்சிப்பதாக இருக்கிறது என்ற நினைக்கின்ற மானா மக்கீன் அவர்களின் ஒரு பிரதியை எனக்கும் அனுப்பி உள்ளார் .

திரு மானா நினைக்கின்றார் அவருக்கு எடுபிடியாக, அவரின் புகழ்பாடும், அவரின் முதுகு சொரியும் ஒரு கையாலாகாத எழுத்தாளனாக நானும் அவர்களின் தவறுகளை கண்டு கொள்ளாமல் அல்லது சுட்டிக் காட்டாமல் இருக்க வேண்டும் என்று.
இலக்கிய நேர்மை உள்ளவன் இப்படி நினைக்கவும் நடக்கவும் மாட்டான்
ஒரு பிழையை சுட்டும் போது அது பிழையாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லது பிழையில்லை என்றால் அதை தர்க்க ரீதியாக நிரூபிப்பதற்கும் ஆளுமை அவசியம், ஒரு பிழையை சரிப்படுத்த பொய்களையும் சுய புராணங்களையும் அவிழ்த்து விடுவது இலக்கிய நேர்மை ஆகாது என்பது மானா போன்ற தொகுப்பாளர்களுக்கு புரிய வாய்ப்பில்லை அவர்களின் வட்டம் மிக சிறியதாகவே படுகிறது..

இனி மானா பற்றி நான் என்ன எழுதினேன் அதற்காக அவரது பதில் என்ன என்பதை வாசித்தால் வாசகர்களுக்கு புரியும் நீண்ட காலமாக ஆழமில்லாமல் எழுதும் சுய புராணம் பாடிகளின் ..காழ்ப்புணர்ச்சி
மாநாட்டிற்கு எனது மனைவியையும் கூட்டிப்போக நான் ஆவலாக இருந்தேன் டாக்டர் ஜின்னாஹ்விடம் இது பற்றி கதைத்த போது அவர் பண்பானவர் ஆற அமர அழகாக பதில் தந்தார், மனைவியை கூட்டிப் போவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் சொன்னார்..ஆனால் அவர்கள் இங்கிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து காயல் பட்டினத்திக்கு பஸ்ஸில் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், சுமார் அறுநூறு கி.மீ. பஸ்பயணம் மனைவிக்கு சரிவராது என்பதால் கப்பலில் பயணம் செய்தால் வெறும் ஒரு மணி நேரத்தில் தூத்துக் குடி துறைமுகத்திலிருந்து காயல் பட்டினம் செல்லலாம் என்பதால் டாக்டர் ஜின்னாஹ்வின் ஆலோசனைப்படி மானா விடம் பேசினேன்
நான்தான் கால் எடுத்தேன் விடயத்தை சொன்னவுடன் சுமார் அரைமணி நேரம் சுயபுராணம் பாடிவிட்டு பெண்களை காயல் பட்டினத்தினர் அனுமதிக்க வில்லை அதனால் பெண்களை கூட்டிப்போக முடியாது என்று திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொன்னார் ஒரு மூத்த எழுத்தாளர் நமக்கு பொய் சொல்லுவாரா? என்று நானும் வாளாவிருந்து விட்டேன், இதற்கிடையில் நான் அமைப்பாளராக இருக்கும் போது நீங்கள் ஜின்னஹ்விடம் அப்ப்ளிகேசன் கொடுத்தது சரியில்லை அப்படி இப்படியென்று மூத்த எழுத்தாளர்கள், இளைய எழுத்தாளர்கள் என்று பலர் பற்றிய குறைகள் (அவர்களின் பெயர்களையும் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பதையும் அடுத்த கட்டுரையில் விவரமாக சொல்கிறேன்) இது தேவையா?

மீண்டும் டாக்டர் ஜின்னஹ்விடம் விசாரித்தபோது அவர் சொன்னபதில் நீங்கள் யோசிக்க வேண்டாம் மனைவியையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார் ஆனால் உண்மையில் நான் மானா சொன்னதை முற்றிலும் நம்பினேன்
இப்படி இருக்க சரி மனைவியை கூட்டி போகத்தான் முடியவில்லை நாமாவது கப்பலில் பயணம் செய்வோம் என்ற எண்ணத்தில் மீண்டும் மாநாவுக்கு கால் எடுக்கிறேன்
ஹலோ சார் .....
ஹலோ.......
நான் நாச்சியாதீவு பர்வீன் பேசுகிறேன் ...சொல்லுங்கள் இப்பவே நெறைய டைம் எடுத்திடீங்க, நான் வேற ரெண்டு லைன்ல இருக்கேன்..என்ன விஷயம் அவசரமா சொல்லுங்க..டென்சனாக வருகுது பதில் ..........................
சந்திர மண்டலத்திற்கு ஆள் அனுப்பும் அநேகமான ஆய்வு கூடங்கள் கூட ஒரே நேரத்தில் மூன்று லைன்ல ஆன்சர் பண்ணுவதில்லை ஆனால் நம்ம மானா அதற்கும் மேல்.. மூன்று லைன்ல ஒரே நேரத்தில் அப்படி என்ன பிசியோ....பாவம் மனுஷன் டென்சன் ஆகிட்டார் பின்னர் அவருடன் பயணித்த பலர் சொன்னார்கள் அவர் டென்சன் பார்டிஎன்று .....அது போகட்டும் அவரோடு தொடர்ந்து பேசி அவரது நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தொடர்பை துண்டித்தேன்.

எனது கட்டுரைகளில் இந்த மானா அவர்கள் என்னுடன் நடந்து கொண்ட முறை பற்றி நான் இலேசாக தொட்டிருந்தேன் ஏலவே டென்சன் பார்டியான மானா அவர்கள் மீண்டும் டென்சன் ஆகி தனது பிழைகளை மறைக்க பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார், எனது கேள்வி என்னிடம் எனது மனைவியை அழைத்து வர வேண்டாம் என்று உறுதியாக சொன்ன மானா அவர்கள் தானும் தனது சகாக்களும் மனைவியருடன் வந்து உல்லாசமாக இருந்தது ஏன்? எனக்கு மானா ஏன் பொய் சொன்னார்? சரி தவறுதலாக மறந்திருக்கலாம் அப்படி என்றால் அவர் அதுபற்றி ஏன் பேசவில்லை? காயல் பட்டினத்தில் நான் பேச முற்பட்ட சில சந்தர்பங்களை அவர் வேண்டுமென்றே ஏன் தவிர்க்க வேண்டும் ?
ஆக பிழை நடந்து விட்டது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கூட இல்லாவிட்டால் என்ன எழுதிஎன்ன கிழித்து என்ன செய்ய?

இதை நான் எழுதியது தப்பாம்..அவரை தூக்கிப் பிடித்து முதுகு சொரிய வில்லையாம் என்ன ஒரு வில்லத்தனம்
சரி அவரது பதில் ? பாவம் அவரிடம் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனத்தை நான் எதிர்பார்க்க வில்லை

எனது பெயர் முதலாவது பேப்பரில் வந்தது மானா அவர்கள் தொகுத்து வழங்கிய லைட் ரீடிங்கில் தான். அது எனது சொந்தப் படைப்பு கிடையாது, தொகுப்புக்களை படைப்பிலக்கியமாக நான் ஏற்றுக்கொவதுமில்லை, ஒரு அரபு பத்திரிகையின் கார்டூனை அனுப்பி வைத்தேன் அதை அவர் பிரசுரித்தார் அவ்வளவுதான், அதன் பின்னர் எனது பேனாவால் பேசுகிறேன் வெளியீடு மட்டுக்கும் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை சுமார் பதினாறு வருடங்கள், ஆனால் என்னை வளர்த்து விட்ட நிறைய நல்லுங்கள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லவர்கள் வெற்றுப் புகழுக்கும் வெள்ளிக்காசிக்கும் அடிமைபடாத யோக்கியவான்கள், சும்மா சிலுப்பிக்கொண்டு திரியாதவர்கள் நல்லவர்கள்

எனது ஆக்கங்கள் எதைப்பற்றியாவது ஒரு வரியாவது மானா அவர்கள் இதுவரைக்கும் எழுதியதுமில்லை,சொன்னதுமில்லை அப்படி இருக்க அவர் வளர்த்து விட நான் கோடரி காம்பாக மாறி விட்டேனாம் என்ன ஒரு அபத்தம் இது பாட்டுக்காக பெயர் வாசித்த அறிவிப்பாளர் உண்டு படைப்புகளுக்கு நான்தான் காரணம் என்றால் அழுவதா? சிரிப்பதா?
மானா அவர்கள் மாநாட்டுக் குழுவினரிடம் வலிந்து கேட்டுத்தான் இந்த அமைப்பாளர் பதவியை பெற்றிருக்கின்றார். பல பரிசில்களும் பொன்னாடைகளும் அவர் கேட்டு வாங்கிப் பெற்றுக் கொண்டதாக அவரே வாக்கு மூலம் தந்துள்ளார் அது மட்டுமா? நண்பர் யாழ் அசீமை கவிபாட அழைத்துச் செல்வதாக ஆசையை காட்டிவிட்டு கடைசியில் அவரை அம்போ என்று விட்டது ஏன் சார்? இவற்றை நாம் எழுதக் கூடாது எழுதினால் கெட்டவர்கள், இது மட்டுமா?
இலங்கையின் தலைசிறந்த கவிஞரான புரட்சிக் கமால் அவர்களின் மகன் அப்துல் ஹையுடன் கிண்ணியா அமீரலி இருவரும் மானாவின் வீட்டுக்கு சென்றபோது கடும் டென்சனாகி கெட்ட வார்த்தைகளால் பேசியது ஏன் சார்? இவற்றை நாங்கள் சொன்னால் நாங்கள் கெட்டவர்கள் ?

தயவு செய்து டொமினிக் ஜீவா போன்றோருடன் உங்களை ஒப்பிட வேண்டாம் அவர் என்னை பல தடவை தட்டிக் கொடுத்துள்ளார், ஆனால் இதுவரை அதைப்பற்றி தம்பட்டம் அடித்த தில்லை ஆனால் நீங்கள் ஏன் இப்படி சார் ?
ஒரு நிகழ்வுபற்றிய அவதானம் அவரவர் பார்வைக்கேட்பே வேறுபாடும், எனது பார்வைக்கு பட்டதை, நினைவில் நின்றதை நான்பதிந்துள்ளேன் அதில் அதை எழுத வில்லை, இதை எழுதவில்லை, அந்தப்பெயர் பிழை என்பதெல்லாம் ஆரோக்கியமான எதிர்வாதமாக படுகின்றதா? வெறும் புகழ் பாடும் வானம்பாடியாகிய நீங்கள் எந்தனை இளையவர்களை உருவாக்கியுள்ளீர்கள் ? வெறும் ஜம்பம் மட்டும் போதாது ஏதாவது சாதித்தும் இருக்க வேண்டும் சார் நீங்கள் சாதனையாளரா? ஒரு ஆங்கிலப் பல மொழி ஞாபகம் வருகிறது ஆழமான ஆறு அமைதியாகவே ஓடும் .................நீங்கள் சலக்கின்றீர்கள்...சலசலக்கின்றீர்கள்...அப்படியானா..... மானா ஞானத்தில் எழுதும் ஓசையில்லா ஓசை பற்றிய உயர்ந்த எண்ணம் தான் எனக்கு இருந்தது ஆனால் இப்போது அவரின் புகழ்பாடும் பகுதியாக, அடுத்தவரை பழிவாங்கும் பகுதியாக பாவிப்பது ஞானத்தின் ஆரோக்கியமான நகர்வுக்கு பாதகமாக இருக்கலாம் ஞானம் ஆசிரியர் இது பற்றி சிந்திக்க வேண்டும் , கணினி பற்றிய அறிவு அறவே இல்லாத மானா தவறுதலாக ஏற்பட்டுள்ள சில எழுத்துப் பிழைகளை தூக்கிப் பிடித்து ..ஆடுவதில் விளங்குகிறது...அவரது ஆழமும் அகலமும் கிழவர்கள் மனைவியுடன் சுற்றுலா செல்ல முடியும் இளைஞர்கள் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மானா போன்றவர்களை ...இன்றைய இளம்பரம்பரை கண்டுகொள்ளாது..என்பது எதார்த்தம்..
எழுத்தாளன் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்றவன் தேங்கி நின்றால் தேறமாட்டான் சிலதுகளை போல..



2 கருத்துகள்:

Shaifa Begum 20 செப்டம்பர், 2011 அன்று AM 1:38  

அட கலக்கல் கட்டுரை.. Superb !
நியாயமான கோபம்..!!. நியாயமான கேள்விகள் ..!!

”ஒரு பிழையை சுட்டும் போது அது பிழையாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லது பிழையில்லை என்றால் அதை தர்க்க ரீதியாக நிரூபிப்பதற்கும் ஆளுமை அவசியம், ஒரு பிழையை சரிப்படுத்த பொய்களையும் சுய புராணங்களையும் அவிழ்த்து விடுவது இலக்கிய நேர்மை ஆகாது

கிளியனூர் இஸ்மத் 4 அக்டோபர், 2011 அன்று AM 5:58  

அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் இந்திய பயணக்கட்டுரை ஐந்தையும் வாசித்தேன்... எளிமையாக இனிமையாக உங்கள் பயண அனுபவங்களை கூறியுள்ளீர்கள்.

குடும்பத்துடன் மாநாட்டுக்கு போக இருந்த உங்களின் ஆர்வத்தை என்னால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது...

இந்த மாநாடு நடக்கும் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்தேன் ஆனால் மதிப்பிற்குரிய எனது நண்பர் டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் வருவது தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாக வந்திருப்பேன்...

உங்களை எல்லாம் எனக்கு பார்க்க கிடைத்திருக்கும் மிஸ் பண்ணிவிட்டேன். இன்னொரு சந்தர்பத்தில் இன்ஷா அல்லாஹ் நாம் சந்திப்போம்..

மானா மக்கீன் வயதானவர் பிழைகளுக்கு அவரை மன்னியுங்கள்...

அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமின்.

கிளியனூர் இஸ்மத்

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by