Related Posts with Thumbnails

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம்-3



ஆறாம் திகதி எங்கள் பயணம் . பயண ஏற்பாடுகளை ஏலவே நான் மனைவியின் உதவியுடன் செய்திருந்தேன் காலை ஒன்பது மணிக்கு நண்பன் நஸ்வருடன் அனுராதபுர இற்கு வந்து சேர்ந்தேன் ஒபீசில்முடிக்க வேண்டிய சில வேலைகள் இருந்தது.. அவசர அவசரமாக அதை முடித்து விட்டு சுமார் பகல் பன்னிரண்டு மணிக்கு விமான நிலையத்தை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது..
பின்னேரம் நாலுமணிக்கு எவரிவத்த சந்தியில் இறங்கினோம் அந்தநிமிடமே
எவரிவத்த பஸ் நிலையத்திற்கான பஸ் கிடைத்து விட்டது..உடனே பஸ் ஸ்டான்டிட்கு சென்று விட்டோம் அங்கிருந்து ஆட்டோ ஒன்றின் மூலம் எயார்போர்டிட்கு செல்வதுதான் எமது தீர்மானம் ஆனால் அது சாத்தியப்படவில்லை காரணம் ஆட்டோக்காரர்களின் நச்சரிப்புதான்

என்னமாய் ஏமாத்துகிறார்கள் விமான நிலையத்திற்கும் பஸ் நிலையத்திற்கும்
இடையிலான செட்டில் சர்வீஸ் இலவசமாக அரசினால் செயற்படுகிறது.
இலவசமாக இயங்கும் இந்த சர்வீஸ் பயணிகளுக்கு மிக பயனுடையதாகும்
ஆனால் இங்குள்ள ஆட்டாக் காரர்கள் பயணிகள் வந்து இறங்கிய உடனேயே
பஸ் பழுது அடைந்துள்ளதாகவும் விமானநிலைத்திட்கு ஆட்டோவில் தான் நீங்கள் செல்ல வேண்டும் என்று எம்மை எப்படியாவது ஆட்டோவில் ஏற்றி அனுப்புவதிலேயே..குறியாக இருந்தனர் இந்த ஆட்டோக்காரர்கள் பற்றி நான் ஏலவே அறிந்து வைத்துள்ளேன் இவர்களில் அநேகமானவர்கள் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்ற வலுவான மனப்பதிவு என்னுள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது..
அத்தோடு நஸ்வரும் ஒரே பிடியாக ஆட்டோவில் செல்ல மறுத்துவிட்டார் எனவே நாம் பஸ்ஸில் செல்வதென்று முடிவு செய்தோம்
ஒரு பத்து நிமிடம் சென்றிக்கும் பஸ் புறப்படுவதற்கு தயாராகி விட்டது இதற்குள்
இந்த ஆட்டாக் காரர்கள் பலரை பஸ் பழுதாகிவிட்டது என்று ஏமாற்றி கூட்டிச் சென்று விட்டார்கள் மாலை ஐந்து மணிக்கு நாம் விமான நிலையத்திற்குள்
நுழைந்து விட்டோம் .
இன்னும் நேரம் இருந்தது எனவே பார்வையாளர் பகுதிக்குள் போய் உடை மாற்றி வர போதுமான நேரம் இருந்தது..
சரியாக மாலை ஆறு மணிக்கு நான் விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டேன் வழமையான கெடுபிடிகள் முடிந்தவுடன் நசுவர் திரும்பி விட்டார் நாச்சியாதீவை நோக்கி .

எனது நுழைவாயில் இலக்கம் பத்து அங்கு சென்று பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது ஏனெனில் யாருமே அங்கு வந்திருக்க வில்லை அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தபோது சிஸ்டம் திறக்கப்படவில்லை என்றும் வெளியில் தாமதிக்குமாரும் அன்புடன் கூறினர்
மீண்டும் ஒரு முறை நான் கடவை இலக்கத்தை சரிபார்த்துக் கொண்டேன்
இலக்கம் பத்துதான் சரி..யாராவது வருகிறார்களா என்று பார்த்தால் யாரையும் காணோம் .

ஒரு அரைமணிநேரம் கடந்திருக்கும் மாவனெல்லையைச்சேர்ந்த தேசிய சேமிப்பு வங்கியின் தலைநகரக் கிளையின் முகாமையாளர் ஸாலிஹ்.எ.மஜீத் வந்து சேர்ந்தார் இருவரும் பேசிக் கொண்டதில் இருந்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம் பின்னர் ஹெம்மதாகம கொட்டேகொட முஸ்லிம் வித்தியாலய அதிபர் அஸ்ஹரும் எம்மோடு வந்து இணைந்து கொண்டார் .

நாங்கள் பலதும் பத்தும் பேசினோம் நேரம் போய்க் கொண்டு இருந்தது விமான நிலையத்தினுள்ளே மகரிப் தொழுகையை நிறைவேற்றினோம் , சுமார் ஏழு மணிவரைக்கும் எம்மோடு payanam செய்யும் ஒருசிலரைத் தவிர யாரும் வந்திருக்க வில்லை ஏழு மணியின் பின்னர் நிறையப்பேர் வந்தார்கள் எனக்கு பரிச்சயமில்லாதவர்கள் ஒருமாதிரி நாங்கள் உள்வாங்கப் பட்டோம் இன்னும் சில நிமிடங்கள் மாத்திரம் எங்கள் பயணத்திக்கு மீதமிருந்தது ஒரு சில நிமிடங்கள்தான் .
இதற்கிடையில் மனைவி , மகள், பலதடவைகள் அலைபேசியில் பேசிவிட்டார்கள் மீண்டும் அலைபேசியின் அலறல் அது அஹ்மத் எம்.நசீர் இன்
இலக்கம் இந்த நேரத்தில் இந்த மனிசன் ஏன்? ஒருவேளை நம்மட பயணத்திக்கு வாழ்த்து சொல்ல போறாரோ..என்று நினைத்து ஆன்சர் பண்ணியபோது தான் அவரும் எம்முடன் வரும் இனிப்பான செய்தி கிடைத்தது..அத்தோடு அவர் அழைப்பை எடுத்த காரணம் எமது பயணக்குழுவின் ஏற்பாட்டாளர் காப்பியக்கோ ஜின்னாஹ் , எல்லோரும் வந்து விட்டார்கள் பர்வீனைக் காண வில்லை என்ற பதைப்பில் எடுத்திருக்கிறார் , நான் உள்ளே முதலாவதே வந்து விட்டேன் என்ற செய்தியை சொல்லி விட்டு நிறுத்திக்கொண்டேன் .
நேரம் செல்ல செல்ல மாநாட்டுக்கு செல்லும் பேராளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.. அதில் பலர் தமது மனைவுயருடன் வந்திருந்தனர்..
நண்பர் அன்சார், ஜவ்பர்கான், மீரா சாகிபு, எழுத்தாளர் புன்னியாமீன் இப்படி சிலர்
தமது மனைவியருடன் வந்திருந்தனர், நானும் எவ்வளவு ஆசைப்பட்டேன் மனைவியுடன் இந்த மாநாட்டுக்கு போக வேண்டும் என்று..ஆனால் மானா மகீன் பெண்களை அழைத்து வருவதில் மாநாட்டுக் குழுவினருக்கு சம்மதம் குறைவு என்ற வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன் ஆனால் கவிஞர் ஜின்னாஹ் தெளிவாக சொன்னார் நீங்கள் உங்கள் மனைவியை கொட்டிக்கொண்டு வரமுடியும் அது oru பிரச்சினையே இல்லை என்று..நான் மானா மக்கீன் அவர்களை வெகுவாக நம்பினேன் ,

மானா avarkal தொலைபேசியில் கதைக்கும் போது தானும் மனைவியைக் கூட்டிக் kondu வரவில்லை என்றும், ஜின்னாஹ்வும் அப்படித்தான் என்றும் உறுதியாக கூறினார் இத்தனை உறுதியாக இவர் கூறும் pothu நான் மனைவியை கூட்டிப் போவதில் ஆர்வம் காட்ட வில்லை ஆனால் இப்போது விமான நிலையத்தில் இந்த நண்பர்கள் தங்கள் மனைவியருடன் வருகை தந்ததைப் பார்த்த pothu மக்கீன் அவர்களில் கொஞ்சம் சந்தேகம் வந்தது..ஒரு வேளை அவர் சொல்லியும் கேட்காமல் இவர்கள் வந்துவிட்டார்களோ..அப்படித்தான் இருக்கும் இல்லைஎன்றால் எவ்வளவு பெரிய எழுத்தாளர் நமக்கு போய் பொய் சொல்லுவாரா?

intha நினைவுகளில் மனம் உழன்று கொண்டிருக்கையில் மவுலவி காத்தான்குடி பவுஸ் , யூனூஸ்.கே.ரகுமான், அஹமத்எம்.நசீர்....கிண்ணியா ஏ.எம்.ஏ.அலி, கிண்ணியா அக்பர் அலி, சாஜாத் இப்படி ஒரு குழுவும் கிண்ணியாவிலிருந்து வந்து சேர்ந்தது

இப்படி பிரபல்யங்கள் பலரின் வருகை தொடர கவிஞர் ஜின்னாஹ் வும் இறுதியாக வந்து சேர்ந்தார் தம்மோடு வருபவர்கள் எல்லோரும் vanthu விட்டார்களா? என்று அடிக்கடி சரி பார்த்துக்கொண்டார்,

எமக்கான விமானம் வந்திருந்தது..நாங்கள் விமானத்துள் ஏறும் நேரம் சரி..
மெல்ல நாங்கள் விமானத்தினுள் ஏறி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் நாம் அமர்ந்து கொண்டோம் , எனக்கு ஒரு ஆசனம் தள்ளி பூமுதீன் அமர்ந்திருந்தார் எங்களுக்கு இடையில் யாரும் உக்காரவில்லை அந்த ஆசனம் வெற்றிடமாக இருந்தது...

இந்தியக் கனவுகில் திளைத்தவனாக நான் இருந்தேன் சிலரை விமானத்திற்குள் வைத்தே எனது கமராவின் moolam பதிவு செய்து கொண்டேன்..இதோ..எமது..இந்தியப் பயணம் ஆரம்பமாகிவிட்டது....ஆம் நீண்ட தூரம் ஓடிய விமானம்..மேலெழுந்து பறக்கத்தொடங்கியது ...சென்னையை நோக்கி..
(இந்திய பயண அனுபவம் தொடரும்)

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by