Related Posts with Thumbnails

சனி, 13 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம்- நான்கு

சுல்தானுடன் நாங்கள்



சுமார் ஒரு மணி நேரப் பயணம் ஆகாயத்தில் , ஒரு வாறு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினோம்..எம்மைவிட முன்னணியில் இந்திய இருந்தாலும் நமது விமான நிலையத்தை விடவும் எல்லா வகையிலும் சென்னை விமான நிலையம் குறைவானதாகவே என் கணிப்பில் பட்டது..சென்னை விமான நிலையத்தில் எமக்கான வேறொரு பிரச்சினை காத்திருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை..

விமான நிலையத்தினுள் குடி வரவுப்பகுதி..பத்துப்பதினைந்து பேர் கொண்ட நாலைந்து வரிகள்..
நாங்களும்..வெவ்வேறு வரிகளில் நின்று கொண்டோம் எம்மோடு வந்த ஒருசிலரை குடிவரவு அதிகாரிகள் எதோ சொல்லி திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள் எனக்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை
எனது முறை வந்தது..
எனது முறை வந்தது..நாங்கள் நிரப்பி கையளிக்கும் பிரயாணிகளின் தகவல் நிறைந்த அப்ளிகாசனில் இந்தியாவில் நாம் தங்கியிருக்கும் இடத்தின் முகவரி தொலைபேசி இலக்கம் போன்றவற்றை..நிரப்ப வேண்டும்..
இதனை அங்கிருந்த அதிகாரி என்னிடம் கூறினார்..இதை நானோ அல்லது எமது
குழுவினரோ..அறிந்திருக்கவில்லை..
நாம் டுவரிஸ்ட் ஆகவே இங்கு வந்துள்ளோம் இனித்தான் ஹோட்டல் புக் பண்ணவேண்டும் பிறகெப்படி நாம் முகவரி தருவது..என்ற எனது கேள்விக்கு
இல்லை இது அரசின் சட்டம் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது..என்று அவர் கூறிவிட்டார்..

இந்திய சட்டப் படி மாநாடுகளுக்கு அல்லது கூட்டங்களுக்கு அங்கு செல்ல முடியாது என்ற விடயத்தை யாரோ அங்கு சொன்னார்கள் ஒவ்வொருவரும் தமது கைகளை பிசைந்து கொண்டிருக்க..

நாங்கள் செல்லும் காயல் பட்டன முகவரியும் தொலைபேசி இலக்கமும் இலங்கையில் வைத்தே என்னிடம் கிடைத்திருந்தது..உடனே அவற்றை நான் எழுதி ஒன்றும் தெரியாதது போல கொடுத்துவிட்டேன்..
அது ஏற்றுக் கொள்ளப்பட்டது இவ்வாறே இன்னும் சிலரும் எழுதிக்கொடுக்க அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
இதற்கிடையில் கவிஞர் ஜின்னாஹ் மாநாட்டுக் குழுவினருட தொடர்புகொண்டு
நிலைமையை இலகுவாக சமாளித்துவிட்டார்.
நாம் அனைவரும் விமான நிலைய கெடுபிடிகளை முடித்து விட்டு வெளியேறும் போது அங்கே அஸ்ரப் சிஹாப்டீனும் மாநாட்டு குழு அங்கத்தவர் மைதீன் ஹாஜி மற்றும் அல் அசூமத் ஆகியோர் எமக்காக காத்திருதார்கள் ,

சென்னை விமான நிலையம் தமிழ் மனத்தது தனித் தமிழ் ஆங்கங்கே ஆங்கிலத் தமிழ் , முற்று முழுதான தமிழின் அடையளப்படுத்தலை இங்கே உணரமுடிந்தது..
நாம் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத வாறு இன்னொரு அதிசியம் அங்கே நடந்தது...
அந்த நள்ளிரவிலும் கொட்டோ கொட்டு என்று..மழை அடைமழை..சுமார் ஒரு மணிநேரம் எங்கள் பயணம் தாமத மானாலும் நெருக்கடியான சனத்திரளின் மத்தியில் பயணிகளின் பயணம் கொஞ்சம் தாமதமாகியது என்னவோ..உண்மைதான்

எங்களை வரவேற்று வானம் பூமழை தூவுவதாகவே எனககுபட்டது..
ஆம் ஒருவாறு மழை நின்று போனது. ஏலவே எமக்காக அஸ்ரப் சிஹாப்தீன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சொகுசு பஸ்ஸிலே எமது பயணம் காயல் பட்டினம் நோக்கி ஆரம்பித்தது .

சென்னையில் இருந்து காயல்பட்டினம் சுமார் அறுநூறு கி.மீ. என்று ஹாஜி மைதீன் கூறினார் சுமார் எட்டு மணி நேரப்பயணம் என்றும் அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்...
சுமார் நள்ளிரவு பதினோரு மணிக்கு எமது பயணம் மீண்டும் ஆரம்பமாகியது..
எங்கள் பயணம் புறநகர் பாதைகளிலேயே ஆரம்பித்தது அந்த நள்ளிரவிலும் சென்னை பட்டப்பகலைப் போல காட்சி அளித்தது ...பஸ் இனுள் ஏறியவுடன் எங்களுக்கு போர்த்திக்கொள்ள பெட் சீட் தரப்பட்டது ..அப்போது அஸ்ரப் சிஹாப்தீன் ..ஒன்கல்க்கு தரப்பட்ட பொன்னாடைகளை நீங்களே போத்தி கொள்ளுங்க ...என்று அடித்த கமன்ட் கலகலப்பா இருந்தது..

கொஞ்சம் தூக்கம் கொஞ்சம் விழிப்பு என்று மதுரையை வந்து சேர்ந்தோம்
எமது காலைக் கடன்களை முடிக்க அது வசதியாக இருந்தது .
அங்கே இருந்த சின்ன ஹோட்டலில் நுழைந்து எமது பசியை போக்கிக் கொண்டோம்
நான் பொங்கல் சாப்பிட்டேன், அன்று தான் பொங்கல் முதல் முதலாக சாப்பிடுகிறேன் நல்ல ருசியாக இருந்தது.. எல்லா வகையான சைவ உணவுகளும் அங்கே இருந்தது
அந்த ஹோட்டலில் ஒரு வாசகம் என்னை கவர்ந்தது...

சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஆலயங்கள் மட்டுமல்ல
நாம் வேலை செய்யும் இடங்களும்தான் .

சுமார் ஒரு மணித்தியாலங்கள் மதுரையில் கழித்து மீண்டும் எங்கள் பயணம்
தொடர்ந்தது..தூத்துக்குடி.. தாண்டி காயல்பாட்டினத்துள் எமது வாகனம் நுழைகிறது.. அங்கே காயல் பட்டினம் என்பதை அடையாளப்படுத்தும் முகமாக
எந்த பெயர் பலகையும் இல்லை , இதனை அஸ்ரப் சிஹாப்தீன் சொன்னார் உண்மைதான் தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய முஸ்லிம் கிராமமான காயல்பட்டினத்தை அடையாளப்படுத்தத் ஒரு பெயர் பலகையாவது இல்லை என்பது பெருங்க குறையாகவே பட்டது..
காயல் பட்டணம் இஸ்லாமும் தமிழும் மணக்கும் அழகான கடற்கரை கிராமமாகும் ...
நாங்கள் ஒருவாறு காயல் பட்டினத்து மண்ணில் கால் பதித்து விட்டோம் , என் உள்ளமும் உடலும் சிலிர்த்தது..
பேராளர் பதிவு , காலை உணவு, பேராளருக்கான புத்தகப் பை என்பன எங்களுக்கு கிடைத்தது..
இதற்கிடையில் மானா மக்கீன் தலைமையில் கப்பலில் வந்த குழுவினர் வந்து சேர்ந்தனர் அவர்களின் வருகை மீண்டும் என்னை அதிர்சிக்குள்ளக்கியது..
காரணம் டாக்டர் தாசிம் அஹ்மத், ஹோரவப்போதானையைச் சேர்ந்த அதிபர் ஒ.ஏ. ரஹீம், மருதூர் மஜீத் , ஊடகவியலாளர் சர்மிளா என்று அநேகமானவர்கள் தங்கள் துணையுடன் வந்திருந்தனர் காணாக் குறைக்கு மானாவும் தனது மனைவியுடன் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் மனிசன் கண்ணுக்கு தட்டுப்பட வில்லை , என்னை வேண்டு மென்றே மனைவியை கூட்டிவார முடியாமல் செய்ததற்கு மாநாவுக்கு நான் என்ன அநியாயம் செய்தேன் என்று தெரியவில்லை என்னைப் பொருத்தமட்டில் பிழையான தகவல்களை தரும் ஒருவர் நல்ல அமைப்பாளராக இருக்க முடியாது..இதுபற்றி மாநாவிடம் கேட்க வேண்டும் என்ற எனது ஆதங்கம் கடைசி வரைக்கும் நிறைவேற வில்லை என்பது வேறுகதை..அதற்கான காரணம் மானா முகம் கொடுத்து பெசாமையாகும்..
பேராளர்களுக்கு தங்கு மிட வசதிகளை விழா ஏற்பாட்டுக் குழுவினர் ஏலவே செய்திருந்தனர் நாங்கள் வெவ்வேறு குழுக்களாக தாங்க வைக்கப்பட்டோம்..

இதற்கிடையில் கிண்ணிய ஏ.எம்.ஏ.அலி, சாஜாத், கிண்ணியா அக்பர் அலி, ஆகியோர் பலத்தையும் பத்தையும் சுவாரசியாமாக பேசினார்கள். எமக்கான வாகனம் தயாரானவுடன் எமது குழுவினர் விடுதிக்குச செல்ல ஆயத்தமானோம்

எங்கள் குழுவில் மொத்தம் ஆறுபேர்கள் இருந்தோம் எல்லாம் ilakkiyaththil paluththa கட்டைகள், நான் மட்டும் வெறும் கன்றுக்குட்டி..
கவிஞர் ஜின்னாஹ், அல் அசூமத் ,அஸ்ரப் ஷிஹாப்தீன், ஒலிபரப்பாளர்கள் அஹமத் எம்.நசீர், யூனுஸ்.கே.ரஹ்மான், நான் எங்கள் அறுவருக்கும் காயல் பட்டினத்து மரைக்கார் வீதியில் சுல்தான் அவர்களின் வீடு தங்குவதற்கு கிடைத்தது..(சுல்தானைப் பற்றி சொல்லுவத்தட்கு அதிகம் உண்டு) காயல் பட்டின கடட்கரைப்போன்காவுக்கு வெறும் மூன்று நிமிட நடை தூரம் தான்..

ஒரு வாறு விடுதிக்கு வந்துவிட்டோம் பயணக் களைப்பு, மீண்டும் பசி..எங்களுக்குரிய அறைகளை ஒழுக்கு செய்துவிட்டு குளித்து விட்டு சாப்பாட்டு மேசைக்கு அறுவரும வந்து விட்டோம்..
சிறு நேரத்தில் சுடச்சுட கோழி புரியாணி விடுத்திக்கே வந்து சேர்ந்தது..புரியாணியை ஒரு கை பார்த்து விட்டு கொஞ்சம் அரட்டை..இலக்கியம் சினிமா, அரசியல், இப்படி பல தலைப்புக்கள் விவாதம் , விதண்டாவாதம், எல்லாம் கலந்த சுவையான அரட்டை..
பயண அலுப்பு மனதையும் உடம்பையும் சோர்வடையச் செய்திருந்தது...எல்லோரும் ஓய்வெடுக்கும் முகமாக தூங்கச் சென்றோம்.. intru வியாழக்கிழமை. இப்போது நேரம் இரண்டு முப்பது..பின்னேரம் ஐந்து மணிக்கு கடத்கைப் பூங்காவுக்கு போக முடிவு செய்தவர்களாக தூங்கச் சென்றோம்

(இந்திய பயண அனுபவம் தொடரும் )


0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by