Related Posts with Thumbnails

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம் -ஐந்து







பயண அலுப்பும், தூக்கமும் எம்மை ஆட்படுத்தியிருந்தாலும், அந்த காலை நேர பரபரப்பானது அவற்றை மறக்கச்செய்திருந்தது கிடைத்த காலை உணவை ஓரமாக உட்கார்ந்து உண்டு முடித்தோம், காயல்பட்டினத்துக் காரர்களின் புன்னகை மாறாத சலாம் எமக்கு புத்துணர்வை உண்டு பண்ணியது எனலாம் அந்தமனிதர்களையும், மண்ணையும் அவதானிக்கின்ற போது மிக நீண்ட உறவு அவர்களுக்கும் எனக்கும் இருப்பதாகவே பட்டது..ஒரு இனம் புரியாத அன்னியோன்யம் எமக்கிடையில் இருப்பதாக ஒரு உணர்வு..

நானும் கிண்ணியா ஏ.எம்.ஏ. அலி, அலி அக்பர், சாஜாத், ஆகியோர் அமர்ந்து பெசிக்கொண்டிருண்டோம் , அப்போது கப்பலில் மானா மக்கீன் அவர்களுடன் வந்தவர்கள் வந்து சேர்ந்து மீண்டும் எனக்கு அதிர்ச்சியை ஊட்டினர்.

ஆம் கப்பலில் வந்தவர்களில் மருதூர் மஜீத், டாக்டர் தாசீம் அகமது, ஹோரவப்போதான ஒ,ஏ, ரஹீம் அதிபர், ஊடகவியலாளர் ஷாமிலா, இப்படி பலர்
தமது துணையுடன் வந்திருந்தனர்..மட்டுமல்ல மானா மக்கீன் அவர்களும் தனது துணைவியுடன் வந்திருப்பதாக கேள்விபட்டேன்..அப்படிஎன்றால் எனக்கு மட்டும் ஏன் போய் சொல்ல வேண்டும்..
மானா மக்கீன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது.ஒரு மூத்த படைப்பாளி இளையவர்களுடன் இப்படியா? நடந்து கொள்வார்கள் இதில் நான் திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டதாகவே எனக்குப் பட்டது , நாங்கள் தானியத் தான் வருகிறோம் என்ற மனிதன் இண்டக்கி அவர் பொண்டாட்டியோடு வந்து பொய்காரன் ஆகிவிட்டார் மானாவின் இந்த ஏமாற்று வேலையினால் எல்லா இலக்கிய வாதிகளும் இப்படித்தானோ என்கின்ற எண்ணம் எனக்குள் மெல்ல எழுந்தது ..எங்கே இந்த மானா நாலு கேள்வி நறுக்கென்று கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எனக்கு மறுநாள் ஜும்மாஹ் தொழுகை முடியுமட்டுக்கும்
கண்ணில் படவில்லை..

நாங்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு விடுதிகளில் தங்கவைக்கப் பட்டோம், குடும்பத்தினருக்கு தனியாக தங்க நல்ல ஏற்பாட்டினை மாநாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர், இவைகளை பார்க்கும் போது மானா எனக்கு புருடா விட்டுள்ளது தெளிவாகியது..
நாங்கள் அறுவர் ஒன்றாக தங்க வைக்கப் பட்டோம், மரைக்கார் வீதியில் அமைந்துள்ள சுல்தான் அவர்களின் வீட்டின் மேல் புறம் எங்களுக்கு வழங்கப் பட்டிருந்தது, காயல் பட்டின கடற்கரைப் பூங்காவுக்கு வெறும் இரண்டு நிமிட நடைதூராம் தான் .
எங்கள் குழுவில் ஒலிபரப்பாளர்களான அஹமத்.எம்.நசீர், யூனுஸ்.கே.ரஹ்மான், அஸ்ரப் சிஹாப்தீன், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன், அல் அசுமத், நான் ஆகியோர் அடங்கி இருந்தோம் ,
விடுதிக்கு சென்றதும் அலுப்புக் கழிய உறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் அடுத்தவர்களும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள் காரணம் பயணக்களைப்பு ..ஆனால் விடுதிக்கு சென்றதும் அரட்டையடிக்க ஆரம்பித்து விட்டோம் , பகல் சாப்பாடு வரும் மட்டுக்கும் எங்கள் அரட்டை தொடர்ந்தது..அரசியல், கலை,இலக்கியம், இப்படி எங்கள் அரட்டையில் அடங்கிய அம்சங்களாகும்

பகல் உணவு சுடச் சுட கோழி புரியாணி மிக ருசியாக இருந்தது.. சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றோம் பின்னேரம் கடக் கரைப் பூங்காவுக்கு செல்லும் கனவுகளுடன் .........

பின்னேரம் ஐந்துமணி வெயிலின் அகோரம் குறைந்திருந்தது, நாங்கள் கடத கரைப்போன்காவுக்கு செல்ல ஆயத்தமானோம், இடையில் சுல்தான் கொண்டுவந்த அருமையான டீயும் பிஸ்கட்டும் எமக்கு புத்துணர்ச்சியை ..ஊட்டியது..

காயல் பட்டின மண்ணில் இறங்கி காலாற நடக்கின்றோம், இந்த ஊரில் போலிஷ் நிலையம் இல்லை என்ற சங்கதியை டாக்டர் ஜின்னாஹ் கூறினார்..பொதுவாகவே இவ்வாறான பெரிய கிராமங்களில் போலிஷ் நிலையங்கள் இந்தியா பூராகவும் இருக்கிறது..ஆனால் இங்கு இல்லை என்றதும் ஆச்சிரியமாக இருந்தது..

வெறும் இரண்டு நிமிடத்தில் கடற்கரையை அடைந்தோம் ..அஹமத் நசீர் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைப்பட்டார்..இதற்கிடையில் யூனூஸ்.கே.ரஹ்மானுக்கு பாத் ரூம் உபாதை..அந்தக் கடத கரையில் பாத் ரூமை எங்கு போய் தேடுவது..
இருந்தும் ஒரு திசையில் யூனூஸ் நம்பிக்கையோடு புறப்பட்டார்..

நாங்கள் கடற்கரை அருகில் அமர்ந்து கொண்டோம் , நிறைய காயல் பட்டினத்துக் காரர்கள் அந்த மாலையை கடத்கரையில்தான் களிப்பர்போலும் .
எம்மோடு வந்த பேராளர்கள் பலரும் கடற்கரைக்கு வந்திருந்தனர் ...
மெல்ல இருள் கவ்வத்தொடன்கியது.. பாத் ரூம் போன யுனூசைக் காணவில்லை
நானும் அகமத் நசீரும் யுநூசை தேடி அவர் சென்ற திசையில் புறப்பட்டோம்
கடற்கரையின் எல்லைதாண்டி ஊர் ஆரம்பிக்கும் இடம் மட்டுக்கும் தேடித் பார்த்து விட்டோம் ஆளைக் காணோம் , அங்கிருந்த கிழவியிடம் வினவ..இந்தப் பகுதியில் இருப்பது..பெண்கள் கழிப்பறை..அந்தப் பக்கம் போய்ப் பாருங்கள் என்று கூறினார்..மறுபடியும் நாங்கள் திரும்பி அவர் காட்டிய திசைப் பக்கம் போனோம்

அங்கே வயதானகாயல் பட்டின கூட்டம் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர் முழுக்கை சர்ட், வெள்ளைச் சாரன், கையில் ஒரு லேஞ்சி, தலையில் வெள்ளைத் தொப்பி..இப்படித்தான் அவர்கள் இருந்தார்கள் ...நாங்கள் அவர்களை கடந்து..போகும் போது.. ..எங்களுக்கு சலாம் சொன்னார்கள்

நீங்க..சிலோனா? அவர்களின் முதலாவது கேள்வி.. ஆமென்றோம்
மாநாட்டுக்கு வந்தின்களோ? ஆமாம் இருவரும் ஒரே குரலில் ..
சிலோனில எங்க கொழும்பா? இல்லை அனுராதபுரம்..
அப்படியா.நான் அநுராதபுரத்தில ..நாலு வருஷம் இருந்திருக்கேன்..என்று..அந்த முதியவர் சொல்ல நாங்கள் யூனுசை தேடுவதை மறந்து விட்டு அவர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து விட்டோம், அவர்கள் இலங்கை பற்றி உயரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள், இலங்கைக்கு இஸ்லாத்தை கொண்டு வந்த்ததில் காயல் பட்டினத்தார்களின் சிறிய பங்களிப்பும் இருக்கிறது என்பதை அவர்களது பேச்சி தெளிவு படுத்தியது..
இதற்கிடையில் அடுத்த மூவரும் எங்களோடு இணைந்து கொண்டனர் ஆனால் யூனுசை மட்டும் காணோம்..
(அனுபவம் தொடரும்)

1 கருத்துகள்:

shamila sheriff,  27 செப்டம்பர், 2011 அன்று 6:00 AM  

farveen, ippady yoonus nanada manatha vaangakkoodathu

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by