இந்திய பயண அனுபவம் -2
மானா மக்கீன் அவர்களுடன் கப்பலில் பயணம் செய்யும் ஆசையில் மண் விழுந்ததினாலும் மனைவிக்கு வர முடியாது என்பதனாலும் மீண்டும் கவிஞர்
ஜின்னாஹ் சரிபுதீனை தொடர்பு கொண்டேன்.. அன்பாக பேசினார் உண்மையில்
அதுதான் ஆளுமையும் கூட எனது பெயர் விபரங்களை வாங்கிக்கொண்டார் வங்கி இலக்கத்தையும் தந்தார் இலங்கை நாணயப்படி பதினேழாயிரம் வங்கியில்
வைப்புச்செய்யுமாறு கூறினார் அப்படியே நானும் செய்தேன் இருந்தும் மனைவியை கூட்டிக்கொண்டு போக முடியவில்லை என்ற கவலை எனக்கு இருந்து கொண்டே இருந்தது ஆனால் இது பற்றி மனைவி அலட்டி கொள்ளவில்லை
இப்போது விசாவுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் பெரும்பாலும் ஜூலை ஆறாம் திகதி எங்களது பயணம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கவிஞர் ஜின்னாஹ் ஏலவே கூறியிருந்தார் இந்திய விசாவுக்கு வெறும் மூன்று வேலைநாட்கள் மட்டுமே செல்லும் என்று கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன் சொல்லியிருந்தார் அத்தோடு பாஸ்போர்டில் உள்ள விபரங்கள் மிகச்சரியாக இருக்கவேண்டும் என்றும் இன்னும் பல விடயங்களையும் கூறியிருந்தார் இதே விடயங்களை முதலாவது தடவையாக மானா மகீன் அவர்களுடன் பேசியபோது அவரும் சொல்லித்தந்தார்.
ஜூன் இருபத்திஎட்டாம் திகதி விசாவுக்கு அப்ளை பண்ணி விட்டு இந்தியக் கனவுகளுடன் வீடு வந்து சேர்ந்தேன் மறு நாள் மனைவிக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்கு வாதம் , இருக்காதா பின்ன ....
ஆசை ஆசையாய் திட்டம் போட்டு விட்டு கடைசியில் உன்னை கூட்டிக்கொண்டு
போக முடியாது காயல்பட்டினத்தில் பெண்களை தங்க வைப்பதில் சிரமம் இருக்காம் என்று ஒரே போடு போட்டால் ...அதுதான் காரணம் இந்தபெரிய மாநாடு நடத்திரவங்களுக்கு பெண்களை தங்க வைக்க முடியாட்டி அந்த மாநாட்டில் நீங்க போய் என்னத்த கிழிக்கப் போறீங்க என்ற அவளது வாதத்தில் யதார்த்தம் இருந்தது..எதோ வாக்குவாதம் முத்த ...
உங்கள் விசா அப்ளிகேசன் ரிஜக்ட் ஆகிடும் பாருங்கள் என்றாள்..அதை நான் கணக்கில் கொள்ளவில்லை ஆனால் அடுத்தநாள் அவள் சொன்னது நடந்தது
இரண்டு பெயர்களுக்கு இடையில் இடைவெளி இல்லை என்ற காரணத்தினால்
அப்ளிகேசன் ரிஜக்ட் ஆகிவிட்டதாகவும் உடனே வந்து புதிய அப்ளிகேசன் ஒன்று சப்மிட் பன்னுமாரும் முதலில் அழகிய ஒரு பெண்குரல் சொல்லிவிட்டு வைத்தது தொலைபேசியை ..நான் வீட்டில் இருக்கும் போது இந்த அழைப்பு வந்திருந்தால் ஒரு வேளை மனைவியுடன் சண்டைபிடித்திருப்பேன் வீட்டுக்கு போயும் அது நடந்தது வேறுவிடயம்...
அதே நாள் பகல் நேரத்திலும் அதே செய்தியை ஒரு ஆண் குரல் சொல்லிவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு கூறியது.. அடுத்த நாள் கிளம்பிவிட்டேன் கொழும்புக்கு மீண்டும் விசாவுக்கு அப்ளை பண்ண ...
அப்போதுதான் இந்தியன் எம்பசிக்கு அருகாமையில் இந்த விசா அப்ளிகேசன் நிரப்பிக் கொடுத்தே வயிறு வளர்க்கும் நிறையப்பேரை கண்டேன்..என்னை பிய்த்து எடுத்துவிட்டார்கள் ஏலவே நான் அப்ளிகேசன டைப் செய்து யு எஸ் பி யில் கொண்டு சென்றிருந்தேன் பிரிண்ட் எடுப்பதற்காக இந்திய எம்பசிக்கு சுமார் இருநூறு மீட்டர் தூரத்திலுள்ள கோமினிகேசனுக்கு சென்ற போது அவர்களின் மெயின் தொழிலே விசா அப்ளிகேசன் டைப் பண்ணிக் கொடுப்பதுதான் அப்ளிகேசன் டைப் பண்ணிக் கொடுப்பதற்கு இருநூற்றி ஐம்பது ரூபாவாம் சும்மா பிரிண்ட் மட்டுமே எடுப்பதானால் இருநூறு ரூபாவாம் வெறும் ஐம்பது ரூபாவில் செய்யும் வேலையை இருநூறு ரூபா கொடுத்து செய்ய என் மனம் விரும்பவில்லை எனவே அங்கிருந்து நகர்ந்து வேறு இடம் நோக்கி சென்றேன் ..
அப்பாடா ஒருகடை கிடைத்தது.. ப்ரின்டையும் எடுத்துவிட்டேன் அவர்கள் வெறும் அறுபது ரூபாய் மட்டுமே எடுத்தார்கள் நூறு இருநூறு மீட்டர் வித்தியாசத்தில் நூற்றி நாப்பது ரூபா எனக்கு லாபம் இப்படி புத்திசாலித்தனமாக எப்போதாவது மட்டுமே நான் நடந்து கொள்வதால் எனக்குள்ளேயே என்னை பாராட்டிக்கொண்டேன் ...
என்னோடு பேசிய அந்த இந்தியன் எம்பாசி நபருடன் நேரடியாக சந்தித்து எனது அப்ளிச்கேசனைக் கொடுத்து விட்டு நிம்மதியாக வீடு சென்றேன்..இடையில் இரண்டு மூன்று நாட்கள் எம்பசி இலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை எனவே எனக்கு நிம்மதி. எப்படியும் விசா கிடைத்துவிடும்...
ஜூலை ஐந்தாம் திகதி மீண்டும் கொழும்புக்கு பயணம் ஏலவே கவிஞர் ஜின்னாவுக்கு நான் வருவது பற்றி சொல்லியிருந்தேன் அவரும் வந்து டிக்கட்டை எடுத்துகொண்டு செல்லுமாறு கூறினார்....
ஆம் எனக்கு விசா கிடைத்து விட்டது நானும் நாளைக்கு காயல்பட்டின மாநாட்டிக்கு செல்லப்போகிறேன்.. கலெக்சன் பகுதில் எனது பாஸ்போர்டை பெற்றுக்கொண்டேன் ....
கவிஞர் ஜின்னாவின் வீட்டை நோக்கி பயணமானேன்..அன்பாக வரவேற்றார்.
எனது டிக்கட்டை தந்துவிட்டு நாளை மாலை ஆறுமணிக்கு எயர் போர்டில் நிற்கவேண்டும் என்றார்...அவரிடம் விடை பெற்று நாச்சியாதீவை நோக்கி பயணமானேன்....இந்தியப் பயணக் கனவுகளுடன்............................
(இந்தியப் பயணக்கட்டுரை தொடரும்)
1 கருத்துகள்:
வித்தியாசமான நடை, நல்ல அனுபவ பகிர்வு
கருத்துரையிடுக