சல்மாவின் வரிகள்.
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப்
புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
"இரண்டாம் ஜாமத்துக் கதை" என்ற சல்மாவின் கவிதை யிலுள்ள சில வரிகள் தான் இவை ...பெண்ணியம் பற்றிய ஆழமான அவதானப் பதிவினை ஏறபடுத்திக் கொண்டு இருப்பவர்களில் சல்மாவும் மிக முக்கியமானவர், ஆணாதிக்க வெறிக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் இவர் இன்றுகளில் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப் படுகிறார், இயற்கை மீதான வெறுப்பும் கோபமும் இவரது இந்தக் கவிதையில் தெளிவாய் தெரிகிறது............
2 கருத்துகள்:
கற்பனைச் சிற்பி ஒருவருடைய சிந்தனை என்பது வாசிப்பவனின் சிந்தனைக்கு மிகத்தொலைவில் இருந்த காலம் இப்பொழுது மாறிவிட்டது அல்லது மாறிக்கொண்டிருக்கின்றது. தகவல் தொடர்பாடல்தொழில்நுட்பம் கச்சிதமான ஒரு மாற்றத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. அந்தவகையில்,வெளிநாட்டில் தொழில் புரிந்த போதும் உள்ளூரில் அருகருகே வாழக்கிடைக்காத போதும் பர்வீனுடனான தொடர்பில் சுமாரான இடைவெளி இருக்கத்தான் செய்தது. இப்பொழுது, கையில் இருக்கும் கனிணியிலே பர்வீன் உட்பட எழுத்தாளர்ளை பலரை அடிக்கடி பார்க்க கிடைக்கின்றது. மகிழ்ச்சி !!
-ரஸ்மின்
அன்பின் றஸ்மின்!
உங்கள் கருத்துக்களுக்கு எனது மனம் திறந்த நன்றிகள் ,உண்மையில் இப்போது நம் தூரம்தொலைந்து போனது, தொலைதொடர்பில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோக்கியமான மாற்றங்கள் இன்னும் நம்மை நெருக்கப் படுத்தும் என நினைக்கிறேன்.
கருத்துரையிடுக