REAL HERO
நாச்சியாதீவு பிரதேச செயலாளர் கித்சிறி , எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன். ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி,. ஆராய்ச்சி.ஆகியோருடன் நாச்சியாதீவு முஸ்லிம் மக்கள் |
சிங்கள முஸ்லிம் தமிழ் என்ற மூவின மக்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவரவர் மதங்களையும் கலாச்சாரங்களையும் அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பின் பற்ற வேண்டும் நாம் எல்லோரும் இந்த சின்ன நாட்டின் மக்கள், வாழப்போகும் சிறுது காலத்தில் இன மத பேதங்களை மறந்து நாம் வாழ்வதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்தை நமது அடுத்த பரம்பரைக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும், என்ற ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி கருத்து தெரிவித்தார் கடந்த 5 /5 /2012 சனியன்று ஹிதோகம பொலிசாரும் நாச்சியாதீவு முஸ்லிம் மக்களும் இணைந்து நடாத்திய வெசாக் தின தன்சலையின் போது இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார்.
ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி |
இவ்வாறான அதிகாரிகள் தான் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திட்க்கும் தேவை, கடந்த காலங்களில் ஹிதோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகளாக இருந்தவர்கள் இலஞ்சத்தையும் ஊழலையும் வெகுவாக செய்து வந்தனர் அனுராதபுர மாவட்டத்திலேயே மிகக் கேவலமான ஒரு பொலிஸ் நிலையமாக இருந்த இந்த பொலிஸ் நிலையத்தை திரு கஸ்தூரி ஆராய்ச்சி அவர்கள் முன்மாதி பொலிஸ் நிலையமாக மாற்றிக்காட்டி உள்ளார்.எல்லா இன மக்களையும் மதிக்கின்ற உயர்ந்த பண்பு பாராட்டப்பட வேண்டியது.
நாட்டு நிலைமை தலை கீழாக சென்று கொண்டிருக்க நிரந்தரமான அமைதிக்காகவும், சுபீட்சமான நல்வாழ்வுக்காகவும் பொலிஸ் உங்கள் நண்பன் என்ற பதத்தை நூறு விகிதம் செய்து காட்டும் இந்த பொலிஸ் அதிகாரி REAL HERO தான், நீதி சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முன் நிற்க்கும் இவர் குடு கஞ்சா கள்ள சாராயம் போன்ற வற்றை விற்பவர்களுக்கும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கமே அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாகிப் போனார் இந்த REAL HERO . (பட உதவி- ஏ.ஆர்.எம்.ரபியுதீன்,நண்பர் நஸ்வர்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக