நீண்ட பாலத்தின் நினைவுகள்.கிண்ணியா பயணம்.
கவிஞர்களான நஸ்புல்லாஹ், மற்றும் கவிஞர் ஏ.எம்.எம்.அலி. |
கிண்ணியா இலக்கியப் பயணமானது மிக அலாதியானது , யாத்ராவை மீளறிமுகம் செய்யும் நோக்கமே பிரதானமாக அந்த பயணத்தின் அடிப்படையாக இருந்ததது, எனது மிக நீண்ட நாள் கனவுகளில் ஒன்று கிண்ணியா செல்ல வேண்டு மென்பது, ஏலவே கிண்ணியா நஸ்புல்லாஹ், மற்றும் கிண்ணியா சபருல்லாஹ் ஆகிய இருவரும் எனது நண்பர்களாக இருந்தார்கள் சமீப காலமாக இன்னும் பல இலக்கிய நண்பர்கள் எனக்கு புதிதாக உருவாகி இருந்தார்கள்.
எனது வகுப்பு தோழர்களான நளீம் ஆசிரியர் மற்றும் பிரபலமான விஞ்ஞான ஆசிரியரான கிபாரி ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற அவா? இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் எங்கள் கிண்ணியா பயணம் ஆரம்பமானது நானும் எனது மாமாவின் மகன் நுஸ்கானும் நாச்சியாதீவில் இருந்து மோட்டார் சைக்களில் சென்றோம், அஸ்ரப் சிஹாப்தீன் குடும்பத்தினருடன் அவரது காரில் வந்திருந்தார்.
கிண்ணியாவில் முதலாவது பாரூக் சேரின் மகன் பதீசின் வீட்டுக்கு சென்றோம், பகல் சாப்பாட்டு வேளை பதீசின் சகோதரி பிர்தொவ்சியா ஆசிரியையின் வீட்டில் பகலுனது, கடல் மீன் நாவுக்கு மிக ருசியாக இருந்தது, அன்று மாலை கடற்கரை ஓரத்தில் இலக்கிய ஒன்று கூடல், மூத்த கவிஞர் கிண்ணியா ஏ,எம்,ஏ, அலி தலைமையில் இடம்பெற்றது,
சுமார் பதினைந்துக்கும் அதிகமான கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர் இளைய மூத்த கவிஞர்கள் என ஒவ்வொருவரும் தனதான இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், அதில் கலைக்காதலன் சத்தார் என்ற கவிஞரின் கருத்துக்களில் சில வித்தியாசம் தொனித்தது பின்நவீனத்துவம் பற்றிய கதையாடல்கள் இப்போதுகளில் பேசப்பட்டுக்கொண்டிருக்க அவர் இலகு நவீனத்துவம் என்ற பதம் பற்றி சொல்ல முனைந்தார் எதிர் காலத்தில் அப்படி ஒரு பதம் உபயோகிக்க படலாம்.
கவிஞர்கள் பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர், யாத்ராவின் ஆசிரியர் அஸ்ரப் சிஹாப்தீன் தனது கருத்துக்களை முன் வைத்தார்,
கவிஞர் கஹ்ஹார் மற்றும் கிண்ணியா அலி ஆகியோருடன் நாச்சியாதீவு பர்வீன். |
நண்பர் நளீமின் வீட்டில் இரவுத்தங்கல்..அடுத்த நாள் காலையிலேயே நண்பர் கவிஞர் கிண்ணிய அசீஸ் அவர்களை சந்தித்து விட்டு கிண்ணியாவிலிருந்து விடை பெற்றோம் ஒரே ஒரு குறையுடன் ....அது தான் நண்பர் சபருல்லவை சந்திக்க முடியவில்லை அப்போது அவர் உம்ராவுக்கு சென்றிருந்தார்.
நண்பர் பதீசுடன்.. எம்மோடு இணைந்திருந்து எம் கிண்ணியா பயணத்தை இனிக்க வைத்த நண்பர்களான அனைவருக்கும் குறிப்பாக நண்பர் கவிஞர் பெரோஸ்கான் மற்றும் பதீஸ் ஆகிய இருவருக்கும். எமது நன்றிகள். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக