அக்கரைப் பட வேண்டியவர்கள்!
நாம் அக்கறைப்பட வேண்டியவர்கள் நம் பெற்றோர்கள், குடும்பத்தில் மூத்தவர்கள், நம் உறவினர்கள் என்று நாமெல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அது உண்மையும் கூட ஆனால் இவர்களை விடவும்
நாம் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய ஒரு பகுதியினர் எமது சிறுவர்களாகும் இன்று உடல் உளரீதியாக பாதிக்கப் படுக்கின்ற அதிக சதவீதத்தினராக சிறுவர்களை கொள்ள முடியும்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம் இந்த பரபரப்பில் நமது குழந்தைகள் பற்றிய அவதானத்தை நாம் வெகுவாக இழந்து போயுள்ளோம் இது இந்த சிறுவர்களின்
வாழ்வில் பல நூறு உளவியல் ரீதியான மன அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் ஆளாகின்றனர் சின்ன சின்ன பிழைகளுக்கெல்லாம் சிறுவர்களின் மீது எரிந்து விழுதல், அடுத்தவர்களின் முன்னால் அவர்களை அவமானப்படுத்தல், மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுதல் , மற்றக் குழந்தைகளை உயர்த்தியும் நம் குழந்தைகளை தாழ்த்தியும் பேசுதல் போன்ற நமது கவனக் குறைவான நமது செயற்பாடுகள் பாரிய பின் விளைவுகளை உண்டு பண்ணக் கூடியது.
பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமல் இருத்தல், பெற்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாமல் இருத்தல், பெற்றோரை அவமதித்தல், கொடூர எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளுதல், முறையற்ற காதலில் விழுதல், மொன்றாம் தர செக்ஸ்சை விரும்புதல், வாழ்க்கை வெறுத்துப் போனதாக நடந்து கொள்ளுதல்
இன்னும் பல ........
ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுடன் கொஞ்சநேரத்தை கடத்துங்கள், அவர்களின் கருத்துகளுக்கு செவி சாயுங்கள், அவர்களின் சின்ன திறமைகளை மதியுங்கள், அவர்களை பாராட்டுங்கள் , எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள் , அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள் , நண்பர்களாக பழகுங்கள்
இன்றைய சிறுவகள் நாளைய பெரியவர்கள் ............அவர்களை புரிந்து கொண்டால்எந்தப் பிரச்சினையும் வராது...
3 கருத்துகள்:
நட்சத்திரப்பதிவராக தெரிவானமைக்கு வாழ்த்துக்கள்
இன்றைய சிறுவகள் நாளைய பெரியவர்கள் அவர்களையும் மதிப்போம்
பதிவு அருமை
சிந்தனையைத் தூண்டிவிடும் அவசியமான பதிவு.
நட்சத்திரப்பதிவருக்கு வாழ்த்துக்கள்.
சக பதிவர்கள் சகோதரி கீர்த்திக்கும், மதிப்புக்குரிய Drஎம்.கே.முருகாநந்தன் ஆகியோரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். மெய்யிலேய இந்த வாழ்த்துக்களுக்கு சொந்தக்காரர் கலைக்குமார் என்ற பதிவுலக நண்பர்தான், இப்போதுகளில் அவரை காணவே இல்லை எங்கே போனாரோ..மனிசனைப் பிடிக்க முடியல்ல...
கருத்துரையிடுக