எல்லாம் முடிந்தது..
ஒரு நிமிசமும்
எதிர்பாராதது என்று
யாருக்கும் சொல்ல முடியாது
எல்லாம் முடிந்தது
கலப்பட வியாபாரம்
நன்றாகவே
நடந்தேறியது
உண்மை ஜனநாயகம்
இன்னும் வாழ்கிறதாம் இங்கு
இன்னும் எட்டு
ஆண்டுகள்
கடவுளே என் மீது
கருணை காட்டு
யாருக்கும்
புரியாத புலம்பல் இது
பித்தர்களே கொஞ்சம்
நில்லுங்கள்
உங்களோடு நானும்
இணைந்து கொள்கிறேன்.
1 கருத்துகள்:
மக்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அருமையான வார்ப்பு
வாழ்த்துக்கள்
note:
word verification ஐ அகற்றவும். பின்னூட்டம் இடுபவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்
கருத்துரையிடுக