புரிந்துணர்வு ஒன்றே காத்திரமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும்.
இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சமாதானம், எல்லா தரப்பினரும் சமாதானம் பற்றி கதை அளக்கின்றனர் , சமாதானத்திட்காக தாம் பாடுபடுவதாக குரல் உயர்த்தி கூறுகிறனர், ஆனால் அவர்களின் சமாதனத்திட்கான முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமானதாக அல்லது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை இது உலகளாவிய ரீதியில் நிறுவக் கூடிய வெளிப்படை உண்மையாகும் . இதனை சர்வதேச ரீதியில் ஆகட்டும், அல்லது உள்நாட்டில் ஆகட்டும் இதுதான் பொதுவான விதியாக, நியதியாக காலாகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது , இதெற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தான் என்ற அகங்காரத்தில் அடுத்தவரை ஆளும் வர்க்கமாக தம்மை நினைத்து ஆட்டம் போடுவதுதான் , இது சாதாரண ஒரு குடும்பத்தில் தொடங்கி சர்வதேசம் மட்டுக்கும் இதுதான் நிலை. ஒரு குடும்பம் அடுத்த குடும்பத்தை ஆள நினைக்கின்றனர், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஆள நினைக்கிறது, ஒரு கிராமம் இன்னொரு கிராமத்தை ஆள நினைக்கிறது , ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆழ நினைக்கிறது இந்த போக்கு நிலையான சந்தேகத்தையும், பரஸ்பரம் குரோதத்தையும், அடுத்தவர் மீது அவநம்பிக்கையையும் பரவலாக ஏற்படுத்தி உள்ளது , இந்த அவலமான போக்கு உலகெங்கிலும் ஒரு சீரற்ற தன்மையை ஏற்படுத்தி இதன் முற்று முழுதான தாக்கத்தின் கீழ் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதி நிதிப்படுத்தும் மக்கள் ஆட்பட்டு இருப்பதையும் அவதானிக்கலாம்,
இலங்கை, இந்தியா , பாகிஸ்தான், நேபாளம், ருவண்டா, உகண்டா, சோமாலியா. எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ............இப்படி உலகில் உள்ள தொண்ணூறு சதவீத மான நாடுகளில் வாழும் மக்கள் தமது நிம்மத்தியை தொலைத்து தினமும் பயந்து பயந்து நாட்களை கடத்துகின்றனர். சர்வதேச அளவில் பல நூறு காரணங்களுக்காக உருவெடுத்திருக்கும் இந்த நிம்மத்தியற்ற தன்மையை நம்மால் மாற்ற இயலாதாகும், ஆனால் நம்மை சுற்றி யுள்ள இந்த அவலங்களிலிருந்து நமக்கு சற்று விடுபட்டு, கொஞ்சம் சந்தோசிக்க முடியும். அதற்க்காக நாம் தயாராக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தில் இருக்கிறோம்.
ஆம் நண்பர்களே, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, அடுத்தவர்களை புண்படுத்தாத அழகான வார்த்தைகள், எந்த மதத்தவர்களையும் மதிக்கும் , கண்ணியப் படுத்தும் மேன்மை, அடுத்தவர்களின் கருத்துகளையும் செவி மடுக்கும் பக்குவம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடுகளையும் தாண்டிய மனித நேசம் , அடுத்தவருக்கு உதவும் இரக்கமுள்ள மனம், குறிப்பாக நம்மை ஆட்டிப்படக்கின்ர ஈ-கோ வுக்கு குட் பை சொல்லுதல்....... இப்படி நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும், காலப்போக்கில் நமது நண்பர்கள், உறவிவ்னர்கள், பக்கத்து வீட்டார்கள் , என்று நம்மை சுற்றி நம்மை நேசிக்கின்ற , அன்புள்ளங்கள், தானாகவே உருவாக அது எதுவாக அமைந்து விடும்,
நமக்குள் அமைதியும், நிம்மதியும், வேண்டுமெனில், நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும் என்ற பொன் மொழியைத்தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன, மதங்களின் இந்த நல்லுப தேசங்களே நமக்கு நிம்மதி அளிக்க போதும் என்கின்ற போது மதத்தின் பெயரால், குலத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால் நாம் பிளவு பட்டு இன்றைகளின் நிம்மத்தியையும், சந்தோசத்தையும் இழந்து தவிக்கிறோம், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம், ஒப்புக்காகவேனும் ஒரு புன்னகையை தவள விட நம்மால் முடிவதில்லை, புன்னகை தான் அன்பின் அடி நாதம் ஆகும்,
எழுத்தாளர்கள், சமூகத்தின் சிற்பிகள் ஆவார்கள்( இப்போது வலை பதிவாளர்களும் தான்) அந்த வகையில் நமக்கான சமூகப் பொறுப்பினை நாம் உதாசீனம் செய்ய முடியாது. சாதாரண மக்களை ஓன்றுபடுத்தும், அல்லது அவர்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கையை உண்டு பண்ணும் முயற்சியில் நாம் நமது படைப்புக்களை தரவேண்டும், இதற்கும் முன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வும், ஒற்றுமையும், வளர வேண்டும், எத்துனை கருத்து மோதல்கள், முரண்பாடுகள் நமக்குள் இருப்பினும் நாம் இதையும் தாண்டிய அன்னியோன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ..........இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நம்மில் சிலர் தன்னம்பிக்கை இழந்து செயற்படாமல் இருப்பதால் தான் எதையும் நம்மால் சாதிக்க முடியாமல் இருக்கிறது..... அவரவர் தனித்துவத்தை இழக்காமல் நாமும் கொஞ்சம் நல்லவர்களாக ஐ-மீன், அடுத்தவர்களை மதித்து கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமா..நண்பர்களே....................
2 கருத்துகள்:
அருமையான கட்டுரை! யார் இதையெல்லாம் கவனத்திலெடுக்கிறார்கள்! பேராசிரியர் சாலமன் பாப்பையா சொன்னதுபோல பழகிப் பாருங்கையா!
இதுதான் தற்போது எமது நாட்டுக்குத் தேவை!
நீர் உம்மைப்பற்றிச் சொன்ன - சுய நலம் கலந்த தெருக்களில் நடப்பதற்கு சத்தியமாய் எனக்கு விருப்பமில்லை -எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
எம்மில் பலர் ஒரு குறுகிய வட்டத்துள் கிணற்றுத் தவளைகளாகத் தான் வாழுகிறார்கள். பரந்து விரிந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது!
சுதந்திரம் கிடைத்த பிறகு நீர் சொன்ன நாடுகள் அனைத்திலும் வாழுவதற்கு - வேண்டிய போராட்டம்!
இன்றுதான் பார்த்தேன் உமது வலைப் பதிவை!
அருமையாக எழுதுகிறீர்!
உம் பணி தொடர வாழ்த்துக்கள்!
thank you thanka mukunthan.
கருத்துரையிடுக